உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இதய கீதம் இருந்தும், இவ்வளவு பெரிய தென்னாடு, வடநாட்டோடு இணைந்து வாழ முடியுமே தவிர, தனித்து எப்படி வாழ முடியும்? திராவிட நாடு என்று ஒரு தனி நாட்டை நிறுவ முடியுமோ? என்று சந்தேகத்தைக் கண்கள் மூலம், கேள்வி ரூபத்தில் கிளப்புகின்றனர்,பலர். பிரிவினை - என்பது, கேட்டதும் பாச் உணர்ச்சி காரணமாக சிறிது கசக்கத்தான் செய்யும். ஆனால் உண்மை யுணர்வு ஏற்பட்டால், அந்த இலட்சியம், வெற்றுக் கூச்சல் அல்ல, காரிய சாத்தியமானது தான் என்பது விளங்கும். பாகிஸ்தான்-கேட்டனர், பலமான எதிர்ப்பு இருந் தது. ஆனால்,பத்து கோடி மக்களின் இலட்சிய கீதம் வீணாகி விடவில்லை! நமது நாட்களிலேயே ‘பார தநாடு" இரண்டாகி, 'பாகிஸ்தான்', 'மிச்ச இந்தியா' ஆகியவை களையும், இரண்டு சர்க்கார்களையும், பார்க்கிறோம். நமது திராவிடஸ்தான் பிரச்னை, பாகிஸ்தானுக்கும் முற்பட்டதாகும். 'பாகிஸ்தான் வேண்டும்' என்று முஸ்லீம் லீக், லாகூர் மாநாட்டில் தீர்மானிக்கு முன் னரே, நமது நாயரும், தியாகராயரும், டாக்டர் நடேசனா ரும் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தி வந்த னர். 'திராவிடன்' என்ற பெயரில் தினசரி நடந்த காலமும் உண்டு. . நமது கோரிக்கை பாகிஸ்தான் வேண்டுமென்ற பத்துகோடி மக்களின் இதயகீதம் எழும்பு முன்னரே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/57&oldid=1740353" இலிருந்து மீள்விக்கப்பட்டது