உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவினை கீதம் 51 உருவாகியதாகும். பாகிஸ்தான் கேட்டதற்கான கார ணங்களைவிட, திராவிடநாடு நாம் கோருவதற்கு ஆதாரங் கள் அதிகம் உண்டு. பிரிட்டிஷார் பிடியில் இந்த உபகண்டம் சிக்குமுன், இது ஒரே நாடாக ஒரு போதும் இருந்ததில்லை, அதிலும் குறிப்பாகத் தென்னாடு, எப்போதும் பிற ஆட்சிக்கு ஆட்பட்டதே கிடையாது--வெளி காட் டினர் நிரந்தரமாக திராவிடத்திலிருந்து ஆட்சி பிரிந்தது இல்லை. பெரிய பெரிய மன்னர்கள், டில்லியில் தர்பார் நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் 'ஆசை' திராவிடத் தில் நுழைந்தது இல்லை. வடநாட்டிலே பலத்துடன், பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் இருந்திருக்கின்றன. சமுத்திரகுப்தன் சந்திரகுப்தன் அசோகன் ஹர்ஷன் கனிஷ்கன் அவுரங்கசீப் அக்பர் போன்றார் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அவரும், எவரும் திராவிடத்தை அடிமைகொண்ட தில்லை. சேரனும் சோழனும் பாண்டியனும், செந்தமிழ் பரப்பியே இருந்திருக்கின்றனர்! தனித்த நாடாக, திராவிடம், தளிர் மலர்ச்சோலை யாக வாழ்ந்த, காலம் ஒன்றுண்டு. பொன்னும் மணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/58&oldid=1740354" இலிருந்து மீள்விக்கப்பட்டது