பிரிவினை கீதம் 53 இந்தியாவின் பல்வேறு இனத்தாரையும் ஏமாற்ற பல சூழ்ச்சித் திட்டங்கள் வகுத்த வண்ணமே யுள்ளனர். இந்த ஆதிபத்திய வெறியின் விளைவாகவே ‘பாகிஸ்தான் மலர்ந்தது. பத்துகோடி முஸ்லீம் மக்க ளும், இந்து மத ஆதிக்கபுரியிலிருந்து விடுபடவேண்டு மென முரசு எழுப்பி வெற்றி பெற்றுவிட்டனர். இப்போது, பஞ்சாப் சீக்கியர் பரணி பாடுகின்றனர், 'அகாலிஸ்தான் வேண்டும்' என்று. சீக்கியர்கள், இந்து மதத்தினின்றும் வேறுபட்ட கோட்பாடுகளை யுடையவர்கள். மொழி, வாழ்க்கைவழி, பண்பு எல்லாவற்றிலும் ஏனைய வட இந்தியரைவிடப் பெரிதும் மாறுபட்டவர்கள். இந்து மதம் எங்களை வாழ விடாது. பஞ்சாபில் உள்ள எங்கள் தொகை அதிகம் ஆனால் மைனாரிடியினராகவே யிருக்கிறோம். எங்கள் மொழி பஞ்சாபி. தாய்மொழி பஞ்சாபியை எங்கள் அரசியல் மொழி யாகக் கொண்டு, தனி நாடமைக்க ஆசைகொள்கிறோம். எங்களுக்கென ஒரு நாடு ஏற்பட்டால்தான் எங்கள் வாழ்வும், எங்கள் தாய்மொழியும் சிறக்க முடியும், இந்தியைத் திணித்து எங்களது பழைமையான தாய்மொழியைச் சிதைக்கத் திட்டமிடுகின்றனர், காங் கிரஸ் ஆட்சியினர்.
பக்கம்:இதயகீதம்.pdf/60
Appearance