உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இதய கீதம் பஞ்சாபி மொழி பரிதாபாரகக் கிடக்கிறது- ஆனால் இந்தியை எங்கள் பள்ளிகளில் கட்டாயமாக்கி யிருக்கின் றனர். இக்கொடுமை எங்களால் சகிக்க முடியவில்லை. தாங்க முடியவில்லை! ஆர்ய சமாஜம், காங்கிரஸ் இந்துக் களின் துணையோடு கோடிக் கணக்கான எங்களை, கும் மிருட்டில் கிடத்தவே திட்டமிட்டு வருகிறது. அதன் முதல் நடவடிக்கைதான். எங்கள் மொழியைச் சிதைத்து, வேண்டாத இந்திக்கு மகுடம் சூட்டுவது. மொழியால் மட்டுமல்ல எல்லா விதத்திலும் தனிப் பண்பு படைத்த நாங்கள் இன்று அரசியலில் அனாதை களாக இருக்கிறோம். பொருளாதாரத் துறையில், கேவலமாகக் கிடக்கிறோம். உத்யோகங்கள் எங்களவர்க்குக் கிடைப்பதில்லை- அதிலும் இளித்த வாயர்களாக ஆக்கப்பட்டே வரு கிறோம்! கோடிக் கணக்கில் வாழும் நாங்கள், நல் வாழ்வுக்கு வழியின்றி வதைபட்டுச் சாகிறோம் ! இது நீங்கி, நாங் களும் நல்லுரிமையோடு வாழ - எங்களுக்கோர் நாடு தேவை, அதுவே 'அகாலிஸ்தான்' என்று, வெற்றிச் சிந்து பாடியவண்ணமிருக்கின் றனர். உரிமையுணர்ச்சி, தனி நாட்டுக் கோரிக்கை, நம்மிடம் மட்டுமல்ல. அங்கும் தீயென வளர்ந்து கொண்டிருக்கிறது1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/61&oldid=1740357" இலிருந்து மீள்விக்கப்பட்டது