பிரிவினை கீதம் 55 உரிமைக் கோரிக்கை ஆங்காங்கும் எழும்புவதைக் காணும் பலர், "பேதம் பார்ப்பானேன் - பிரிந்துபோக எண்ணுவானேன்" என்று கேட்பர். மானையும் சேர்த்துலவச் செய்தால்? நரியையும் புள்ளி புலியையும் பசுவையும் ஒரே கூண்டில் போட்ட டைத்தால்? தர்மோபதேசம் பலித்தாவிடும்? அதுபோலவே, இந்திய உபகண்டம், வலுத்த 'புலி'களும் இளைத்த 'பசு'க்களும் அடைக்கப்பட்ட கூண்டாகியிருக்கிறது, ஒரே கூண்டில் புலியும் பசுவும் இருக்கவேண்டு மென்று கூறுவது ஏதேச்சாதிகாரியின் ஏமாற்றுவித்தை. ஏமாற்றுவித்தை பல நாட்களுக்குப் பலிக்காது. இது, மறைக்கமுடியாத உண்மையாகும். இதை எதி ரொலிப்பதுதான், நாட்டு மக்களிடை உரிமையுணர்ச்சி வளர்வது! எதிர் முகாமிலிருந்தே, அதற்கான செல் வாக்கும் வளர்ந்துகொண்டு வருகிறது. பிரிவினைகீதம்- பிணிபோக்கும் மருந்து! அதை, மறைக்கலாம்--ஆனால் நீண்ட நாட்களுக்கு மறுத்துவிட முடியாது. எரிமலையும் குமுறும் கடலும் எழும்பித்தான் தீரும்!
பக்கம்:இதயகீதம்.pdf/62
Appearance