பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படைப்பிரிவுகள் நாட்டு மக்கள் வைத்திருந்ததையெல்லாம் தின்று தீர்த்து விட்டன. இப்போது எங்காவது ஒரு கோழி தென்பட்டால் அதுவே பெரிய அதிருஷ்டம்தான். அவர்களது டாங்கி டிவிஷன்களையும், மோட்டார் கார் வசதிகளைக் கொண்ட யூனிட்டுகளையும் பற்றி அவர் கிட்டத்தட்ட வெறுப்போடுதான் பேசினார்: “' அவர்கள் கிராமங்களை வெறுமனே தூர்த்துத் துடைத்தெறிந்து விடுகிறார் கள், பன்றிப் பயல்கள்! அவர்களுக்குப் பின்னால் செல்வது என்பது பாலைவனத்தின் வழியாகச் செல்வது போலத்தான்.” - லான்ஸ் கார் ப் ேப ர ர ல் பெர்க்மானுடன் பேசிக் கொண்டிருப்பது பொறுமையை மிகவும் சோதிப்பதாகத்தான் இருந்தது. அந்தப் புழுக்கம் மிகுந்த நிலவறையில் நிலவிய காற்று, போர்வீரனின் உடையிலிருந்த, வெறி பிடித்ததுபோல் வாய் ஓயாமல் பிதற்றுகிற அசட்டு முட்டாளான அந்தக் கொலை கார்னின் நசுநாறித்தனமான பேச்சுக்களால் இன்னும் அதிகமான அளவில் எங்களைப் புழுங்க ைவத்து அமுக்குவதாகவே நாங்கள் உணர்ந்தோம். சுத்தமான காற்றைச் சுவாசிப்பதற்காக வெ ளியே போக விரும்பினோம்; எனவே உரையாடலைச் சட்டென்று நிறுத்தினோம். முடிவில் அவர் தமது ஆசனத்தைவிட்டு எழுந்து நின்றார்; அட்டென்ஷனில் நின்றவாறு, இரண்டு மணி நேரமாகத் தம்மிடம் கேள்விகள் கேட்டபோது, தாம் தமது படைப்பிரிவின் நிலையையும் அதன் பலத்தையும், மற்றும் அதிகாரிகள் இருக்கும் இடத்தையும் ஆயுத தளவாடங்களைக் குவித்து வைத்துள்ள இடத்தையும் பற்றி சோவியத் தளபதியிடம் தாம் உண்மையான தகவல்களையே சொல்லியதாகக் கூறினார். ரஷ்யாவுக்கு எதிரான போருக்குத் தாம் திடமான எதிரி என்பதாலேயே தாம் தமக்குத் தெரிந்ததையெல்லாம் கூறிவிட்டதாகவும், வி ச ர ரி த் து ப் பார்த்தால், தாம் கொடுத்த தகவல்களையெல்லாம் நிச்சயமாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்பதாகவும் அவர் கூறினார். எனவே அவர் தாம் ஒரு யுத்தக் கைதியாக இருப்பதைத் தமது மனைவிக்குத் தெரிவிக்க ஒரு வாய்ப்பளிக்க வேண்டுமென்றும், மேலும், தாம் கடைசியாக உணவு உண்டு ஏழு மணி நேரம் ஆகிவிட்டதாகவும், அதனால் முடிந்தால் தமக்கு இன்னொரு முறை உணவளிக்குமாறும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். இப்போது எங்கள் முன்னால் வழவழப்பான தலைமுடியும், முகத்தின்மீது நீல நிறப் பருக்களும், திருட்டுத்தனமாகப் பாய்ந்தோடும் கண்களும் கொண்ட ஒரு இருபது வயது

இளைஞன் இருந்தான். அவன் ஜெர்மன் தேசிய சோஷலிசக்

98