பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டு உழைக்கும் அத்தகைய திறமைசாலிகளைக் கொண்ட நாடு ஹிட்லரின் அருவருக்கத்தக்க ஆட்சியைச் சகித்துக் கொண்டி ருப்பது சமயங்களில் எனக்கு வெறுப்பை ஆட்டியது என்பது உண்மைதான், என்றாலும், அதெல்லாம் அவர்களது சொந்த விஷயம் என்று நினைத்துக் கொண்டேன், இதன் பின் போர் மேற்கு ஐரோப்பாவில் தொடங்கியது... எனவே நானும் போர் முனைக்குச் செல்லும் வழியில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நான் இவ்வாறு நினைத்துக் கொண்டேன்: ஜெர்மானியரிடம் வலிமைமிக்க எத்திரங்கள் உள்ளன; அவர்களது ராணுவமும் மோசமானதல்ல. எப்படி.. இருந்தால் என்ன? அத்தகைய எதிரியோடு மோதுவதும், அவர்களுக்கு உதை கொடுப்பதும் நல்ல வேடிக்கையாகத்தான் இருக்கும் என்றும் நினைத்துக் கொண்டேன், நாம் யாருக்கும் முட்டாள்கள் அல்ல, இல்லையா? நிச்சயமாகச் சொன்னால், அவர்கள் மிகவும் நேர்மையான முறையிலேயே சrைடை போடு airர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை-மேலும், பாசிசத்தோடு அவர்கள் உறவு வைத்துக் கொண்டிருக்கும்போது அங்கு என்ன நேர்மை இருக்க முடியும்? ~என்றாலும், இத்தகைய நீசத்தனமான ஈனப் பிறவிகளோடு நாம் சண்டைபோட வேண்டியிருக்கும் என்று நான் என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை. உறிட்லரின் ரா எனுவம் அந்த அளவுக்குக் கேடு கெட்டுப் போயிருந்தது. நல்லது. இப்போது நான் அதைப்பற்றிக் கூறிக் கொண்டி ருக்க விரும்பவில்லை.... எங்கள் யூனிட் ஜூலை மாத இறுதியில் போர் முளையை அடைந்தது. நாங்கள் 27ஆம் தேதியன்று காலையில் சண்டையில் கலந்து கொண்டோம். முதலில் எங்களுக்குச் சற்றுப் பயமாக இருந்தது, அவர்கள் தமது சிறு பீரங்கிகளால் எங்களுக்குப் பெருந் தொல்லை கொடுத்தனர்; என்றாலும் அன்றைய பகற்பொழுது கழிவதற்கு முன்பே நாங்கள் சுதாரித்துக் கொண்டு விட்டோம்; பின்னர் அவர்களை அவர்கள் ஆக்கிரமித்திருந்த கிராமத்திலிருந்து விரட்டியடித்தோம் அந்தச் சண்டையில் நாங்கள் சுமார் பதினைந்து பேரைக் கைதிகளாகப் பிடித்தோம். எனக்கு எல்லாமே நேற்று நடந்ததுபோல் நினைவிருக்கிறது; அ வ ர் க ளை உள்ளே கொண்டு வந்தபோது அவர்கள் பயந்து வெளிறிப் டோயிருந்தனர். எனது படைவீரர்கள் அந்த மோதலுக்குப் பின்னர் அதற்குள் ஆத்திரம் தணிந்து விட்டனர், இப்போதோ அவர்களில் ஒவ்வொருவரும் தம்மால் முடிந்ததனைத்தையும்-- மெஸ்-டின் நிறைய சூப், புகையிலை, சிகரெட்டுகள், தேநீர்

முதலிய பலவற்றையும்-அந்த ஜெர்மானியர்களுக்குக் கொடுக்க

110