பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணும் தூசியுமாக என் முன் ஒரு பெரிய தூணே எழுந்து நிற்பதைக் கண்டேன் என்று நினைக்கிறேன். அவ்வளவுதான். ஒரு குண்டுச் சிதறல் என் தலைக் கவசத்தைத் துளைத்துப் பாய்ந்தது; மற்றொரு சிதறல் எனது வலது தோளுக்குள் புகுந்து தங்கிக் கொண்டது.

    • நான் எவ்வளவு நேரம் வரையில் அங்கே கிடந்தேன்

என்பது எனக்குத் தெரியாது. எனினும் எனக்குப் பிரக்ஞை மீண்டபோது, காலடிச் சத்தங்களைக் கேட்டேன். நான் தலையை உயர்த்திப் பார்த்தேன்; பார்த்தபோது நான் அடி. பட்டு விழுந்த இடம் அதுவல்ல என்பதைக் கண்டு கொண்டேன். யாரோ என் சட்டை யைக் கழற்றி விட்டு, என் தோளுக்குக் கட்டுப் போட்டிருந்தனர். என் தலைக் கவசத்தைக் காணவில்லை, என் தலைக்குக் கட்டுப்போட்டது யாராக இருந்தாலும், அந்த நபர் அதனை அவசரம் அவசர மாகத்தான் போட்டிருக்க வேண்டும் என்று தெரிந்தது. ஏனெ. னில் கட்டுப் போட்டிருந்த துணியின் கடைசிப் பகுதி சரியாகக் கட்டப்படாமல், என் மார்பின் மீது தொங்கிக் கொண்டிருந்தது . பிரக்ஞை மீண்ட அந்த முதல் கண நேரத்தில், எனது படை வீரர்கள் தான் என்னை இங்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும், அவர்கள்தான் வழியில் என் காயங்களுக்குக் கட்டுப் போட்டிருக்க வேண்டும் என்றும் நினைத்தேன், நான் தலையை உயர்த்திப் பார்க்கச் சிரமப்பட்டபோது அவர்களையே நான் காண்பேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்னை நோக்கி ஓடி வந்தவர்களோ ஜெர்மானியர்கள். அவர்களை நான் நல்ல திரைப்படத்தில் காண்பதுபோல் அத்தனை தெளிவாகப் பார்த்தேன். நான் என்னைச் சுற்றிலும் . கைகளால் தட்டுத் தடவிப் பார்த்தேன். ஆனால் கைக்கெட்டும் தூரத்தில் ஒரு ஆயுதமும் இல்லை. ஒரு கைத்துப்பாக்கியோ, ஒரு துப்பாக்கியோ, அல்லது கையால் எறியும் வெடிகுண்டும் கூட இல்லை. எனது படை வீரர்களிற் சிலரே வரைபடம், இருந்த எனது பையையும், எனது ஆயுதங்களையும் அகற்றியிருக்க வேண்டும்.

  • மரணம் இதோ நெருங்கி விட்டது என்றே நான்

நினைத்தேன், அந்தக் கணத்தில் நான் வேறு என்ன நினைத்தேன்? ஒன்றுமே இல்லை. நீங்கள் உங்களது வருங்கால . நாவலுக்கு இதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினால், எப்படியாவது கற்பனை செய்து சமாளித்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் எதைப் பற்றியும் நினைத்துப் பார்ப்பதற்கே எனக்கு . உண்மையில் நேரமில்லை, ஜெர்மானியர்கள் மிகவும் அருகிலேயே

இருந்தனர்; நான் கீழே கிடந்த வாறே. சாக விரும்பவில்லை..

115