பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைதிகளை அவர்கள் பின் தங்கிவிட்டார்கள் என்பதற்காகச் சுட்டுக் கொன்று விட்டனர்.

  • " நான் அந்த ஆற்றையும், அதன் குறுக்கே தென்பட்ட

தகர்க்கப்பட்ட பாலத்தையும், அதன் ஒரு கோடியில் மாட்டிக் - கொண்டு நின்ற ஒரு 'லாரியையும் ஏற்கெனவே பார்க்க முடிந்தது. அங்கு நான் ரோட்டில் முகம் குப்புற விழுந்தேன், இல்லை. நான் பிரக்ஞை இழந்து விடவில்லை. என் வாய் முழு வதும் புழுதி அடைக்க, நெடுஞ்சாண் கிடையாக அங்கு நீண்டு விழுந்து கிடந்தேன். ஒரு குருட்டுத்தனமான கோபாவேசத் தோடு என் பற்களை நறநறவென்று கடித்தேன்; ஆயினும் என் உடம்பில் உயிர் இருந்ததே தவிர, என்னால் எழுந் திருக்கவே முடியவில்லை. மற்றவர்கள் என்னைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தணிந்த குரலில் இவ்வாறு கூறினார்: “ எழுந்திருங்கள் சீக்கிரம்; இல்லாவிட்டால் அவர்கள் . உங்களைச் சுட்டுக் கொன்று விடுவார்கள், நான் என் விரல்களால் என் வாயைக் கிழித்தேன்; வேதனையாவது என்னை எழுந்து நிற்க உதவும் என்ற எண்ணத்தில் கண்களை 4ம் பிறாண்டினேன். - 65 வரிசை ஏற்கெனவே என்னைக் கடந்து சென்று விட்டது. அப்போது அந்த மோட்டார் சைக்கிள் என்னை நோக்கி உருண்டோடி வரும் சத்தத்தைக் கேட்டேன்; உடனே நான் எழுந்துவிட்டேன். என்னைக் கொல்லப் போகிறவன் யார் என்பதைத் திரும்பிக்கூடப் பார்க்காமல், குடிகாரனைப்போல் தள்ளாடி நடந்து கொண்டே, வரிசையை எட்டிப் பிடித்து அதனோடு சேர்ந்து கொண்டேன். அந்த ஆழமற்ற சிற்றாற்றை அப்போதுதான் கடந்து சென்றிருந்த ஜெர்மன் டாங்கிகளும், கார்களும் தண்ணீரைக் கலக்கிச் சேற்றை மேலே , கிளப்பி விட்டிருந்தன; என்றாலும் நாங்கள் அந்த இதமான, பழுப்பு நிறமான சேற்றின் மீது தாகத்தோடு பாய்ந்தோம்; எங்களுக்கு அது மிக மிக இனிமையான ஊற்று நீரைக் காட்டிலும் இனிமையாக ருசித்தது. நான் அந்த நீரில் என் தலையையும், காயம்பட்ட தோளையும் கழுவிக் கொண்டேன். இது எனக்கு அற்புதமாகப் புத்துணர்வூட்டியது. இப்போது எனக்கு மேலும் நடப்பதற்கும் தெம்பு இருந்தது. இனியும் நான் சோர்ந்து விழுந்து ரோட்டில் கிடக்கமாட்டேன் என்ற நம்பிக்கை பிறந்தது. “் நாங்கள் அந்த ஆற்றைக் கடந்து வந்ததுமே, நடுத்தர ஜெர்மன் டாங்கிகளின் அணிவகுப்பொன்று ரோட்டின் வழியாக

எங்களை நோக்கி வருவதைக் கண்டோம். அவற்றில் முன்னு

119