பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் என்னை வாசவிலேயே சந்தித்து விட்டார். அவரே முற்றிலும் ஓய்ந்து போன மனிதராகத்தான் இருந்தார். பயங்கரமாக வற்றி மெலிந்து ஆரோக்கியம் குன்றிப் போயிருந்த அவர், தாம் அனுபவிக்க நேர்ந்த துன்பங்கள் அனைத்தினாலும் ஏற்கெனவே அரைப்பைத்தியமாக மாறியிருந்தார். காய மடைந்தவர்கள் அசிங்கமான வைக்கோலின் மீது படுத்துக் கிடந்தனர்; அந்த லாயத்தில் நிரம்பி நின்ற மூச்சைப் பிடிக்கும் துர்நாற்றத்தில் அவர்கள் மூச்சுவிட மாட்டாமல் திணறிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலோரின் காயங்களில் புழுக்கள் நெளிந்தன. காயமடைந்தவர்களில் அவற்றைத் தோண்டியெடுத்துப்போட முடிந்தவர்கள் தமது கைவிரல் களாலோ அல்லது குச்சிகளாலோ அவற்றைத் தோண்டி எடுத்துப் போட்டனர். இறந்து போனவர்களும் கூட அங்கு குவியலாகத்தான் குவித்துப் போடப்பட்டிருந்தனர்; அந்தக் குவியலை அகற்ற முடியாத அளவுக்கு அது மிகவிரைவாக உயர்ந்துகொண்டே வந்தது. 44 * நல்ல து . உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்?' என்று டாக்டர் என்னிடம் கேட்டார்; " என்னிடம் கட்டுப்போடும் துணி ஒரு துண்டு கூடக் கிடையாது. என் ணிடம் எதுவுமே கிடையாது! கடவுள் பெயரால் கூறுகிறேன். போய் விடுங்கள் ; இங்கிருந்து போய் விடுங்கள்! உங்களது கட்டுக்களை அவிழ்த்தெறிந்துவிட்டு, உங்கள் காயங்களின்மீது கொஞ்சம் சாம்பலைத் தூவிவையுங்கள், இங்கேயே வாசலருகே கொஞ்சம் புதுச்சாம்பல் கிடக்கிறது.' அவர் சொன்னபடியே நான் செய்தேன். நான் முகாமுக்குத் திரும்பி வந்ததும், காவலாளிகளின் சார்ஜெண்ட் பல்லெல்லாம் தெரியச் சிரித்துக் கொண்டே, “ நல்லது. எல்லாம் எப்படி இருந்தது? ஓ! போர் வீரர்களான உங்களுக்கு ஒரு அருமையான டாக்டர் வாய்த்திருக்கிறார், அவர் உனக்கு உதவினாரா?' என்று என்னிடம் கூறினான். நான் பதில் கூறாமலே அவனைக் கடந்து செல்ல விரும்பினேன்; ஆனால் அவனோ என்முகத்தில் தனது முஷ்டியால் ஒரு குத்து விட்டவாறே,

  • எனக்குப் பதில் கூறவுமா மறுக்கிறாய்? அட்டுப்பிடித்த பன்றிப்

பயலே!' என்று கத்தினான். நான் கீழே விழுந்தேன்; அவனோ என்னைத் தன் காலால் உதைக்கத் தொடங்கினான்; என் தலையும் மார்பும்தான் அவனது உதைகளின் இலக்காக இருந்தன. மேலும் உதைக்க மாட்டாமல் அவன் களைத்துப்போன பிறகுதான், அவன் உதைப்பதை நி று த் தி னா ன். நான் உயிரோடிருக்கும்

வ ன ர ட லு ம் அந்த நாஜியை மறக்கமாட்டேன்!

122