பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றுமே மறக்கமாட்டேன்! இதன்பின்னரும் கூட நான் அவனிடமிருந்து பலமுறை அடி ' வாங்கி னேன். முள்கம்பி வேலியின் ஊடாக அவன் பார்க்கும்போது நான் அவன் கண்ணில் பட்டுவிட்டால் போதும், மறுகணமே அவன் என்னை வெளியே வருமாறு உத்தரவிடுவான், வெளியே வந்ததும் மௌன மாக அடிகொடுப்பதிலேயே கவனமாக இருந்து என்னை அடித்து நொறுக்குவான். - ' ' நான் எவ்வாறு இதையெல்லாம் மீறி உயிர் பிழைத்திருந் தேன் என்று நீங்கள் கேட்கக் கூடும்,

  • பாருங்கள். நான் மெக்கானிக்காக வேலை பார்க்கத் .

தொடங்குவதற்கு முன்னால், காமா துறைமுகத்தில் ஒரு சுமைக் கூலியாக இருந்தேன். சரக்கை இறக்குவதற்காக அங்கு கப்பல்' எதுவும் வரும்போது, ஒவ்வொன்றும் ஒரு சென்ட்னர் எடையுள்ள இரண்டு உப்பு மூட்டைகளை நான் ஒரே சமயத்தில் சுமந்து கொண்டு வந்து விடுவேன். எனவே என் உடல் அத்தனை வலுவாக இருந்தது; அத்துடன் எனது ஆரோக்கியமும் பொது. வாக நன்றாகத்தான். இருந்தது. என்றாலும் பிரதானமான விஷயம் என்னவென்றால், நான் 'சாகவே , விரும்பவில்லை' என்னிடம் அத்தனை எதிர்ப்புச் சக்தியும் இருந்தது. நான் எனது நாட்டைப் பாதுகாத்து நிற்கும் போர் வீரர்களின் அணிகளுக்குத் திரும்பவும் வந்துவிடவேண்டும் என்றே காத்திருந்தேன் . அவ்வாறே எதிரியின் மீது எனது பழியைத் தீர்த்துக்கொள்ள நான் திரும்பி வரவும் செய்தேன், - 6<வேறொரு முகாமுக்கு நான் மாற்றப்பட்டேன். அது முதல் முகாமிலிருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அது ஒருவிதமான 'வினியோகக் கேந்திரமாகவே இருந்தது . இந்த இரண்டு முகாம்களும் ஒன்றுபோலத்தான் இருந்தன. இங்கும் முள் கம்பியினால் அமைக்கப்பட்ட உயரமான வேலி இருந்தது; மேலும் எங்கள் தலைக்குமேல் கூரை எதுவும் இல்லை. இங்கும் உணவு படுமோசமாகவே இருந்தது; சில சமயங்களில் வேகவைக்காத தினைத் தானியத்துக்குப் பதிலாக ஒரு குவளையளவுக்கு வேகவைத்த உளுத்த கோதுமையை எங்களுக்கு வழங்கினர் என்பதொன்றே வித்தியாசம். எப்போ தாவது இறந்துபோன குதிரைகள் முற்றத்துக்குள் இழுத்து வரப்பட்டன; அதன். நாற்றமெடுக்கும் தசையை எங்களுக்குள் பங்கு போட்டுக்கொள்ள மட்டும் அவர்கள் விட்டுவிட்டனர், நாங்கள் அதனைத் தின்றோம்; அதனால் நாங்கள் பசியினால், சாக வில்லை; மாறாக, அது விஷமாக மாறியிருந்ததால் எங்களில் நூற்றுக்கணக்கானோர் மாண்டுபட்டனர். செப்டம்பர் மாதம் :

வேலி தம் இங்கும் முன் னடு முகாம்

123