பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு குழந்தை கூட என்னைப் பிடித்துத் தள்ளிவிட முடிந்திருக்கும். தோலை இழுத்துப் போர்த்திய காய்ந்த , குச்சிகளைப் போல் சுருங்கிப் போய்விட்ட எனது கரங்களை நான் பயபீதியோடு பார்த்தேன்; இந்நிலையில் நான் எப்படி, இங்கிருந்து எப்படித் தான் தப்பித்து ஓட முடியும் என்று எண்ணி வியந்தேன். ஆரம்பத்திலேயே தப்பியோட முயலாததற் காக என்னை நானே சபித்துக் கொண்டேன். அப்படி ஓடும்போது என்னை அவர்கள் கொன்றிருந்தால்தான் என்ன? இந்தச் சித்திரவதையாவது எனக்கு மிச்சமாகியிருக்குமே! - “மாரிப்பருவம் வந்தது. நாங்கள் இடத்தைச் சுத்தம் செய்வதற்காக, தரையில் படிந்திருந்த வெண்பனியை வாரி வழித்துக் கொட்டிவிட்டு, உறைந்த தரைமீது படுத்துறங்கினோம். முகாமில் மேலும் மேலும் ஒரு சிலரே மிஞ்சியிருந்தனர்....... இறுதியாக, விரைவிலேயே நாங்கள் எங்காவது வேலை செய்ய அனுப்பப்படுவோம் என்று எங்களிடம் கூறப்பட்டது. எங்கள் உணர்வுகள் புத்துயிர் பெற்றன. அது ஒரு மங்கலான நம்பிக்கைதான்; எனினும், எங்களில் ஒவ்வொருவரும், தாம் எப்படியாவது தப்பிச் செல்ல முடியும் என்று மீண்டும் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினோம். அன்றிரவு மிகவும் குளிராக இருந்தது; என்றாலும் காற்று எதுவும் வீசவில்லை. பொழுது விடியப்போகும் தருணத்தில், நாங்கள் பீரங்கிப்படையின் குண்டுப் பிரயோக ஓசையைக் கேட்டோம், குவியலாகக் குவிந்து கிடந்த நாங்கள் அனைவரும் விழிப்படைந்து பரபரத்தோம். அந்த ஓசை திரும்பத் திரும்பக் கேட்டபோது யாரோ ஒருவர், 'தோழர்களே! நமது ராணுவம் தான் முன்னேறி வருகிறது என்று உரத்த குரலில் கூறினார். கடவுளே! அப்போது ஏற்பட்ட உணர்ச்சிப் பரபரப்பைப் பார்க்கவேண்டுமே! - நாங்கள் எல்லோரும் உடனே துள்ளி யெழுந்து நின்றோம்; சில நாட்களாகவே எழக்கூட மாட்டாமல் இருந்தவர்களும்கூட எழுந்து நின்று விட்டார்கள், அவர்கள் உணர்ச்சிப் பரவசத்தோடு ர க சி ய க் குரலில் பேசினர்; உள்ளடங்கிய குரலில் விம்மியழுவதும் கூடக் கேட்டது ; என் அருகிலிருந்த யாரோ ஒருவர், ஒரு பெண்ணைப்போல் விம்மி விம்மி வாய்விட்டே அழுது விட்டார்; நானும்தான்; நானும் கூடத்தான் .... என் கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது; அது பனிக் கட்டியாய் உறைந்தது.... யாரோ மெலிந்த கரகரத்த குரலில் சர்வதேச கீதத்தைப் பாடத் தொடங்கினார்கள். நாங்கள் எங்களது மெலிந்த கீச்சுக் குரல்களோடு அவரோடு சேர்ந்து

பாடினோம். காவலாளிகள் எந்திரத் துப்பாக்கிக ளாலும் சிறு

126