பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகோன்னதமான சித்திரங்கள், நம் கண் முன்னாலேயே கண்ணாரக் காணும் வண்ணம் எழுந்தோங்கி வருகின்றன. வரலாற்றில் முன்னென்றுமே கண்டறியாத வீரச்செயல் களைப் புரிந்து காட்டுவதற்கு, மக்களை ஒழுங்கமைக்கவும், அவர்களுக்குப் போதமும் ஆயுதபலமும் வழங்கி, அவர்களை ஓரணியில் திரட்ட.வும் கூடிய கட்சி உண்மையில் மகாவலிமை படைத்ததுதான்! தமது நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, எதிரிகள் அனைவரையும் முறியடித்ததோடு மட்டுமல்லாமல் , உலகெங்க ணுமுள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கைத் தீட!ஜாக வும் மாறியுள்ள மக்கள் மகத்தானவர்கள்தான்! வெல்லற் கரியவர்கள்தான்! எனது நண்பரே, அத்தகைய மக்களின், அத்தகைய கட்சியின் உண்மையான புத்திரனாக இருப்பது, நாமும் நமது காலத்தவரும் வாழ்வில் அறிந்து கொள்ளக் கூடிய மிகப் பெரும் ஆனந்தம் இல்லையா? மேலும், நமது தாயகத்தின் வருங்காலம் மற்றும் நமது கட்சியின் லட்சியம் ஆகியவற்றின்பால் நமக்குள்ள கடுமையான பொறுப்பிலிருந்து, வருங்காலத் தலைமுறையினருக்கு மட்டுமன்றி, நமது நாட்டைப் பாதுகாக்கும் பணியில் போரிட்டு மாண்டவர்களின் புனித நினைவுக்கும் நாம் கடமைப்பட்டுள்ள பொறுப்பிலிருந்து, இன்று வாழ்ந்து வரும் நாம், அலுப்புச் சனிப்பு அறியாத முயற்சிகளுக்கும் புதிய வீரச் செயல்களுக்கு கான உத்வேகத்தைப் பெறவில்லையா? ஜனவரி 21 அன்று, லெனினது மரண தினத்தன்று, உலகத் தொழிலாளர்கள், 24 ஆண்டுகளுக்கு முன்பு தாம் செய்ததைப் போலவே, இந்தத் துக்க நாளில் அன்று தொட்டுச் செய்து வந்துள்ளதைப் போலவே, மனித குலத்துக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கான மார்க்கத்தைக் காட்டிய இந்த மனிதருக்கு மௌன அஞ்சலி செலுத்துவர், ஒரு மாபெரும் கட்சியின் தலைவரும், உலகின் முதல் சோஷலிச அரசின் நிறுவனருமான இவர் 1919-ல் பின்வரும் மறக்க முடியாத வாசகங்களைக் கூறினார்: இந்த நாட்டில், ரஷ்யாவில், உலக வரலாற்றிலேயே முதன் முறையாக, சுரண்டல்காரர்கள் நீங்கலாக, தொழிலாளிகளையும் உழைக்கும் விவசாயிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட சோவியத்துக்கள் எனப்படும் வெகுஜன ஸ்தாபனங்களைக் கொண்டே, நாட்டின் அரசாங்கம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது; இந்த சோவியத்துக்களே எல்லா அரசு அதிகாரத்தையும்

செலுத்தி வருகின்றன. எனவேதான் முதலாளித்துவ வர்க்கத்தின்

142