பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"முடியும்?' இப்படித்தான் மோசமான சா ரியங்கள் நிகழ்ந்து விட்ட ன் . .' எனக்கு அவள் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது, என்றாலும் நானும் சிரிக்க விரும்பினேன். ஆனால், நான் அவளது சிரிக்கும் வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்; அப்போது என் இதயம் மீண்டும் குன்றிப் போய்விட்டது, அவளது பற்கள் வெள்ளையாக இருந்தன ; வெள்ளை என்றால் அத்தனை வெள்ளை. யான, பலமும் கூர்மையும் பெற்ற, ஒழுங்கு குலையாமல் நெருக்கமாகக் கூடியமைந்த பற்கள் அவை. ஓர் ஓநாய்க் குட்டியைப் போல், அந்தப் பற்களே நிறைந்திருந்த வாயைக் கொண்டிருந்தாள் அவள், அந்தப் பல்லைத்தான் ' இப்போது பாரேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இத்தகைய பற்களைக் கொண்டு, இவள் ஒரு வயதான கன்றுக் குட்டியைக் கூட இரண்டு துண்டாக எளிதில் கடித்துப் - போட்டுவிட முடியுமே, அப்படியென்றால், இவளை நான் திருமணம் , செய்து கொண்டால், என் கதி என்னவாகும்? எங்களுக்குள் ஏதாவது தகராறு ஏற்பட்டால், இவள். தன் கைகளைக் கொண்டு என்னை ஒன்றும் செய்துவிட மாட்டான்; ஏனெனில் சண்டை போடுவதற்கு முடியாத அளவுக்கு இவள் கைகள் அத்தனை சிறியவை. ஆனால் இவள் தனது பற்களைக் கொண்டு என்மீது பாய்ந்து விட்டால்? , பிறகு கடவுள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும், அப்படி இவள் பாய்ந்தாள் இவள் என் தோலை நார் நாராகக் கிழித்தெறிந்து விடுவாள், ஏன், அவ்வாறு இவள் கிழித்தெறிவதை நான் கண்டுணரும் முன்பே, இவள் குறைந்தபட்சம் இரண்டு காலுறை நாடாக்களுக் - குத் தேவையான தோலை என் உடம்பிலிருந்து கிழித்திருப்பாள். ""பின் னால், பயத்தினால்தானோ என்னவோ, அல்லது கோபத்தினால்தானோ என்னவோ, என் நாக்கு எப்படியோ மீண்டும் அசையத் தொடங்கி விட்டது. நான் அவளை நோக்கி இவ்வாறு கூறினேன்: 'இப்போது நீ சிரித்துக் கொண்டிருக் கலாம். ஆனால், கவனம் இருக்கட்டும், நீ என்னைக் கல்யாணம் செய்து கொண்ட பிறகு, அழாமல் இருப்பாயா என்பதைப் பார்த்துக் கொள்,' இதற்கு அவளும் சட்டென்று இவ்வாறு பதில் சொன்னாள்: 'பார்ப்போமே என்றானாம் குருடன். நம் இருவரில் யார் அழப் போகிறார்கள் என்பதை இனிமேல் அல்லவா பார்க்க வேண்டும்.'

    • நாங்கள் அத்தோடு பேச்சை நிறுத்தி விட்டோம். பிறகு

அவள் தனது பற்களைக் கொண்டே என்மீது மேலாதிக்கம்

செலுத்தி வந்திருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

151