பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லை.... இது நம்மை . இன்னும் அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்று விரும்பச் செய்கிறது ; என்றாலும், நாம் எவ்வளவுதான் அதிகமாக வேலை பார்த்தாலும் என்னைப் போன்ற சாதாரண மக்களின் பால் அரசு காட்டிவரும் அற்புத மான அக்கறைக்குப் பிரதிப்பலன் என்று பார்த்தால், அந்த உழைப்பு உங்கமிகக் குறைவான தாகவே தோன்றும், லட்சோப லட்சக் கணக்கான சோவியத் மக்கள், தமது மகோன்னதமான நாட்டுக்குப் பணி புரிய வேண்டும் என்ற தமது ஒரே விருப்பத்தால் தூண்டப் பெற்று, எல்லா முயற்சித் துறைகளிலும் அரும்பாடுபட்டு உழைத்து வருகின்றனர்... பேரன்புக்குரிய அரு பைத் தாயகமே! எங்களது எல்லையற்ற பிள்ளைப் பாசம் அனைத்தும் உனக்கே உரியது; எங்களது சிந்தனை கள் எல்லாம், உன்னோடுதான் உள்ளது! 1943 - சமாதான வீரர்களின் அகில யூனியன் மாநாட்டுக்கு ஆற்றிய உரையிலிருந்து பிரதிநிதித் தோழர்களே, மனிதகுல வரலாற்றில் மிகமிக உன்னதமான கருத்தினால் வழி நடத்தப் பெற்று ஒன்றுபட்டு நிற்கும் எனது அருமை நாட்ட வர்களே! தோழர்களே! தோழமையிக்க அயல் நாட்டு நண்பர்களே; இதயத்திலும் எண்ணத்திலும் எங்களுக்கு நெருக்கமான மக்களே! உங்களுக்கு உரையாற்றுவது ஒரு சொற்பொழிவாளன் இல்ல; மாறாக, ச. "தாரண மக்களோடு பேசிப் பழகிவிட்ட ஓர் எழுத்தாளன்தான், என து எளிமையான மொழிக்காக என்னை மன்னித்து விடுங்கள்; 47ன்றாலும், வாய்மொழியில் திறமையில்லாத ஒரு நடரும்கூட, வாழ்க்கையின் பேரால் வாழ்க்கை அவனிடம் முறையிடும்போது, வாய்திறந்து பேசத் தொடங்கி விடுகிறான் என்பதைப் புரிந்து கொள்ள முயலுங்கள்......, எங்களது மாபெரும் நாடு. உலகிலேயே மிகப் பெரிதான நாடு-ஒரு தாய்க் கழுகைப்போல், 111 தேசிய இனங்களைத் தனது வலிமைமிக்க, இறக்கையின் கீழ் அரவணைத்துக் கொண்டுள்ள எங்கனது தாயகம்--ஒரு புதிய யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிட விரும்புவோரை, மக்களின் சார்பாக, கோபாவேசத்தோடும் உறுதியோடும் கண்டித்து நாம் பேசியாக வேண்டும் என்பதற்

காக, நம்மை இங்கு ஒன்று திரட்டியுள்ளது, இங்கே கூடியுள்ளது.

180