பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“மா ரிப்பருவத்தின் தொடக்கத்தில் நான் ஒரு நாள் அதிகாலையில் நதியின் பக்கம் சென்றேன். அப்போது மிக மிக வயது முதிர்ந்த ஒரு .: கோஸாக் கிழவர் என்னருகே.. வந்து இவ்வாறு கேட்டார்: ..: " நீங்கள் 'ஒரு' அணை... கட்டிக்’ -- கொண்டிருக்கிறீர்கள், அப்படித் தானே... மகனே? இது சரிவர நிறைவேறி. ::முடியும் என்று நினைக்கிறீர்களா?" ": * . , , - * - * - * " நிச்சயமாக்' என்று பதிலளித்தேன் நான் போல்ஷிவிக்கு கள் ஒன்றைத் திட்டமிட்டால், அது சரிவர நிறைவேறி முடிவதும் நிச்சயமே?' (வேலை நடக்கட்டும், மகனே' என்று அந்தக் கிழவர் கவலையோடு முகத்தைச் சுழித்தவாறே கூறினார்: “அதோ பாருங்கள், வில்லோ மரங்கள் சிவ ந்து போயிருப்பதை-மாரிப் 1.3ருவம் சற்று வெது வெதுப்பாகவே இருக்கும் என்பது தான் இதற்கு அர்த்தம்; ஆனால் வசந்தம் வரும்போது கவனமாக் இருங் கள். பனிக்கட்டி உடைபட்ட பிறகு, ஆற்றில் வெது வெதுப்பான தண்ணீர்தான் வரும். நீங்கள் கவனமாக இருக்கா விட்டால், அது எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போய் விடும், புத்தகங்களில் தான் டான் நதி மிக வும் அமைதியானது என்று கூறப்பட்டுள்ளது; ஆனால் உண்மையில் அது வசந்த பருவத்தில் மிக மிக மூர்க்கமானது; அது தன் வழியில் எதிர்ப் படும் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்துவிடும். எனவே நீங்கள் கட்டிவரும் அணை யை அது தகர்த்துவிடாமல், நீங்கள் உங்கள் கண்களை நன்றாகத் திறந்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளுங்கள்.'

  • இதன்பின் அவர் திரும்பிப் போய் விட்டார்,

நதியின் மீது பனிக்கட்டிப் பாறை உடைபடுவது எங்களுக்குப் பெருத்த ெத ர ல் லை யை யும் கவலையையும் கொடுத்தது. எல்லா நிலைமைகளுக்கும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்று தான் எவரும் நினைத்திருக்கக் கூடும். ஆனால் நீர்மட்டமோ மிகமிக உயர்ந்துவிட்டது; கடந்த எழுபது ஆண்டுகளில் அது இந்த அளவுக்கு என்றுமே உயர்ந்ததில்லை; வலிமைமிக்க எந்திரங்களும், மக்கள் புலப்படுத்திய அரும்பெரும் வீரமும் சேர்ந்து தான், படு நாசம் நிகழவிருந்த தைத் தவிர்த்து விட்டன. மக்கள் அணையையும் தாற்காலிகமான ரயில் பாலத் தையும் காப்பாற்றுவதற்காக, பல இரவுகள் தூக்கமே இல்லாமல், இரவும் பகலும் உழைத்தனர். தண்ணீர் அஸ்தி

வாரத் தின் மேல்தளம் வரையிலும் மேலேறி வந்துவிட்டது;

187