பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமாத்தனமான போக்கோடு (அதாவது * ' அவன் ஒரு சிணுங்கிக் கொண்டிருக்கும் சிறுபிள்ளை யாக இருக்கலாம்; இருந்தாலும் அவன் என்னவன் என்பது போன்று) ஆதரவு காட்டுவதையும் நிறுத்தும்போதுதான், விமர்சனமானது உண்மையிலேயே புரட்சிகரமானதாகவும், ஈவிரக்கமற்றதாகவும் கண்டிப்பானதாகவும், உண்மையை நேர் நின்று நோக்கு வ தாகவும் மாறும்போதுதான், இது நிகழும் போதுதான் இந்தக்

  • 'கோ ஷ்டிக் கும்பல், “தமது சொந்த" எழுத்தாளர்களையே

புகழ்ந்து கொண்டும், தமது கொள்கையை சாராத பிறர் மீது அவதூறு பொழிந்து கொண்டும், இலக்கிய முச்சந்திகள் அனைத் திலும்தான் ஓலமிட்டுக் குலைத்துக் கொண்டும் இருப்பதை நிறுத்தும். இந்த நிலைமைகள் நிலவும் போதுதான், நமது சோவியத் வாசகர் களுக்கு நாம் வழங்கிய எண்ணற்ற, பரவலாக விளம்பரப் படுத்தப்பட்ட வாக்குறுதிகளை நம்மால் நிறைவேற்ற இயலும். இல்லாது போனால், * 'நேர்மையான சளசளப்புப் பேச்சாளர் களாக, மட்ட... மான இலக்கியத்தைப் படைப்பவர்களாக நாம் இருந்து வருகிறோமே, அப்படியே இருந்து வருவோம். 1934 ஆங்கில வாசகர்களுக்கு (* 'டான் நதி அமைதியா 5 ஓடுகிறது * நாவலின் ஆங்கில வெளியீட்டுக்கு எழுதிய முன்னுரை) டான்நதி அமைதியாக ஓடுகிறது என்ற எனது நாவலை ஆங்கில வாசகர்களும் பத்திரிகைகளும் உளங் கனிந்து வரவேற்றுள்ளதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது எனக்கு விசேட மகிழ்ச்சியை அளிக்கிறது; ஏனெனில் இங்கிலாந்து உலக இலக்கியச் செல்வக் களஞ்சியத்தில் பல மதிப்புமிக்க படைப்புக் களைச் சேர்த்துள்ள மாபெரும் எழுத்தாளர்களின் தாயகமாகும்; அவர்களது அமர இலக்கியங்கள் ஆங்கில வாசகர்களின் ரசனைச் சுவையை வளர்க்க உதவியுள்ளன. இங்கிலாந்தில் எனது நாவல் ஓர் 1'அன்னியமா ன' கதை யாகப் புரிந்து கொள்ளப்படுகிறது என்பது எனக்கு ஓரளவு கவலை தருகிறது. ஐரோப்பியர்களுக்கு மிகவும் அன்னியமானதாகத் தோன்றும் டான் கோஸாக்குகளின் வாழ்க்கையைப் பற்றிய

  • நான்கு பாகங்கள் கொண்ட இந்த நாவலின் முதற்பாகம் "ஆற்றது

கரையினிலே' என்ற தலைப்பிலும், இரண்டாம் பாகம் வெற்றி முரசு” என்ற

தலைப்பிலும் தமிழில் வெளிவந்துள்ளன, வெளியீடு: புதுமைப் பதிப்பகம்,

224