பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்ந்த போராளியை மரணம் பறித்துக் கொண்டு விட்டது. அவர் உடலளவில் நோயினால் தோற்கடிக்கப்பட்டுப் பயங்கர மாகத் துன்பப்பட்டு வந்த போதிலும், தமது கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரையிலும், ஒரு கம்யூனிஸ்டு எழுத்தாளரின் ஆயுதத்தோடு தமது கட்சியின் உன்ன தமான கருத்துக்களின் வெற்றிக்காகத் தொடர்ந்து போராடி வந்தார். லட்சோப் லட்சக் கணக்கான மக்கள் ஆஸ்திரோவ்ஸ்கியின் 'உதாரணத்தி லிருந்து எப்படி வாழ்வது, எப்படிப் போராடுவது, எவ்வாறு வெற்றி காண்பது: எவ்வாறு ஒருவரது தாயகத்தை நேசிப்பது என்பதைக் கற்றுக் கொள்வர், இத்தகைய அற்புதமான நபரை உருவாக்கி வளர்த்தமைக் காக நாம் நமது நாட்டையும், நமது கட்சியையும், கர்ம்செர் மாலையும் குறித்துப் பெருமைப்படுகிறோம், பாசத்தோடும் நன்றியுணர்வோடும் பாராட்டோடும் அவர் நினைவுகூரப்பட்டு வருவார். நாம் சுமக்க நேர்ந்துள்ள இழப்பு பெரிதுதான். டிசம்பர் 23, 1936 சோவியத் எழுத்தாளரைப் பற்றி ஸ்..!”னியப் பிரதிநிதிக் குழுவின் உறுப்பினரான காப்டன் ஏஞ்செல் ஆன்டெம், சோவியத் எழுத்தாளர்கள் தமது படைப்புக்களுக்கு எவ்வாறு சன்மானம் பெற்று வருகின்றனர் என்று தெரிந்து கொள்ள விரும்பினார். . மேற்கு ஐரோப்பாவுக்கு நான் மேற்கொண்ட பயணங் களின் போது இந்தக் கேள்விக்கு நான் திரும்பத் திரும்பப் பதிலளிக்க வேண்டியிருந்தது. மேலும் ஒவ்வொரு முறையும் நான் சோவியத் எழுத்தாளர்களுக்கும் முதலாளித்துவ எழுத் தாளர்களுக்கும் உள்ள அடிப்படையான வேற்றுமையை விரிவாக விளக்கிக் கூற வேண்டியிருந்தது . கூலிக்கு மாரடிக்கும் எழுத் தாளர்களைத் தட்டிக் கொடுத்து வளர்ப்பதன் மூலம், முதலாளித்துவம் நேர்மையான எழுத்தாளர்களையும் கூடக் கெடுத்து . விடுகிறது. ஜன நாயகத்துக்கும் முன்னேற்றத்துக்கு மான போராட்டத்தோடு தமது தலைவிதியைப் பிணைத்துக் கொண்டுள்ள அத்தகைய பாசிஸ்டு-எதிர்ப்பான எழுத்தாளர்களை நான் இங்கு இயல்பாகவே குறிக்கவில்லை. ஒரு முதலாளித்துவ எழுத்தாளர் எந்த நிலைமைகளில் இருந்து வர நேர்கிறதோ அந்த நிலைமைகள், இலக்கியப் படைப்டரின் சமுதாய முக்கியத்துவத்தைப் பின்னணிக்குத் தள்ளி

237

237