பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிட்டவற்றில், இரண்டாம் பிரிவில் அவர் எழுதிய அடிப்படை யான எழுத்துக்களைத் தொகுத்து வழங்குகிறது. 1931-ல் அவர் பிராவ்தாவில் “டான் நதியின் வடகரையின் வழியாக என்ற தமது கட்டுரையை வெளியிட்டார்; அதில் அவர் பண்ணைகளை எதிர்நோக்கி நின்ற அதியவசரமான பணிகளைக் குறித்து அக்கறையோடும் ஆழ்ந்த - விஷய ஞானத்தோடும் எழுதியிருந்தார்; கூட்டுப் பண்ணை நிர்வாகத்தில் திறமைக்கு நேரும் இடையூறுகளையும் மற்றும் தவறுகளையும் அதில் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

  • "எழுத்தாளர் மற்றும் விமர்சகரின் நேர்மையான பணிக்காக

என்ற கட்டுரை (1934) இலக்கியப் பணியில் நிகழ்ந்து வந்த உதவாக்கரைப் போக்குக்கு எதிரானதாக இருந்தது. பான்ஃபெ ரோவின் நூல்களில் பயன்படுத்தப் பட்டிருந்த பாஷை சம்பந்த மாக கார்க்கி வெளியிட்ட கண்டன் விமர்சனத்தால் வெடித்த காரசாரமான வாக்குவாதத்தில், ஷோலகோவ் பான்ஃபெரோ வோடும் செராஃபிமோவிச்சோடும் கடுமையாக வாதிட்டும், குறிப்பிட்ட கும்பல்களோடு தாம் கொண்டிருந்த பரிவுணர்ச்சியின் சாயல்களைத் தாங்கிய கருத்துக்களைக் கொண்ட அந்த இலக்கிய விமர்சகர்களை கண்டனம் செய்தும், கார்க்கியின் பக்கம் உறுதியோடு நின்றார், டான் நதி அமைதியாக ஓடுகிறது என்ற நாவலின் ஆங்கிலப் பதிப்புக்கு அவர் எழுதிய முன்னுரையும் வ ா தி டு ம் தன்மை படைத்ததேயாகும். அதில் ஷோலகோவ் ஏற்கெனவே உலகப் புகழ் பெற்றுவிட்ட இந்த நாவல், மற்றும் தமது புதிய படைப்பாள கன்னி நிலம் உழப்பட்டது ஆகியவற்றின் அடிப் படைக் கருத்தை விளக்குகிறார்; உள்நோக்கங் கொண்ட அயல்நாட்டு வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அவரது ' படைப்பைப் பற்றி அப்போது நிலவி வந்த தவறான . வியாக்கியானத்தை அவர் திருத்துகிறார். டான் நதி அமைதியாக ஓடுகிறது என்ற நாவல் சம்பந்தமாக , அவர் “ முதல் உலக யுத்தம் மற்றும் புரட்சி ஆகியவற்றின் விளைவாக வாழ்க்கையிலும், அன்றாட நடவடிக்கைகளிலும், மனித மனோபாவத்திலும் நிகழ்ந்துள்ள பிரம்மாண்டமான மாற் றங்களைப் பற்றி எழுதினார்; 'இரு போர்களின் போதும் (முதல் உலக யுத்தம்;. உள்நாட்டு யுத்தம்) புரட்சியின் போதும் வாழ்ந்த டான் பிரதேச மக்கள் தொகையின் பல்வேறு சமூகப் பகுதியினரையும் காட்டுவதும்”', .....1914-க்கும் 13 21-க்கும் இடையே நிகழ்ந்த சம்பவங்களின் வலிமைமிக்க சூறாவளிக்குள்

சிக்கிய தனிநபர் களின் துன்ப மயமான வாழ்க்கையை இனம்

28