பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.52லர்தியாவின் மரபுகள் ஆகியவற்றின் தொடர்ச்சியை நளின மாக வ வியுறுத்துகிறது: மொலோதயா சுவார்தியாவின் இளம் நூலாசிரியர்களோடு சேர்ந்திருப்பதில் நான் , எப்போதுமே மகிழ்ச்சியடைகிறேன்! நானே மேலும் இளமை பெற்று வருவது போல் உணர்கிறேன்... தமது புத்தகங்கள் மற்றும் தாம் உயிரைப் பெய்து உருவாக்கி யுள்ள கதாபாத்திரங்கள் ஆகியவற்றின் மூலமாக மட்டுமல் லாமல், அபிப்பிராயங்களை நேருக்குநேர் பரிமாறிக் கொள்ளும் பரிவர்த்தனைகளின் மூலமும், தமது இளம் வாசகர்களோடு நேர் முகமாக உரையாட ஷோலகோவ் தயாராக இருப்பதே. இந்த நானாவிதமான, எண்ணற்ற சந்திப்புக்களின் முக்கியமான அம்சமாகும். ஷோலகோவுடன் நடைபெறும் . இந்தச் சந்திப்புக்களில், இளம் எழுத்தாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், போர்) வீரர்கள், ஏன் எங்களது புகழ்பெற்ற சோவியத் விண்வெளி வீரர்கள் ஆகிய எல்லா விதமான நபர்க ளுமே கலந்து கொள் கின்றனர். அமரர் யூரி ககாரினும், போரிஸ் வோவி ேனாவும், வெஷென்ஸ்காயாவில் ஷோலகோவின் விருந்தினர்களாக இருந்துள்ளனர். பண்டிதத்தனமான அல்லது 8உபதேசம் செய்கின்ற தொனி யைக் கடைப்பிடிப்பதும் அதனைப் பற்றிப் பிடித்துக் கொள் வதும், ஷோவகோவுக்குக் கட்டோடு பிடிக்காது; அவர் . தம்மிடம் நேரடியாகக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப் பதையே பொதுவாக விரும்புகிறார். தமக்கும் தம்முன் இருப்போ ருக்கும் இடையே ஒரு துடிப்புமிக்க கலந்துரையாடலைத் தூண்டி விடுவதையே அவர் விரும்புகிறார். தமது எண்ணங்களை முறைப் {படி. தங்குதடையற்று வெளியிடும் முறையானது, அவரது வியா சங்கள் மற்றும் செய்தித்தாள் கட்டுரைகள் அல்லது பெரிய சபையோரின் முன்னால் ஆற்றப்படும் சொற்பொழிவுகள் ஆகிய வற்றுக்கு மட்டுமே கையாளப்பட்டு வருகிறது. போராடும் மனிதனே மனிதாபிமானி ஷோலகோவின் எழுத்துக்கள் அனைத்திலும் மனிதனின் நன்மைக்கான போராட்டம் பற்றிய கருத்தும் மற்றும் கம்யூனிசக் கருத்துக்களுமே குடிகொண்டுள்ளன. அவரது கதைப் படைப் புக்கள் மற்றும் அவர் உருவாக்கியுள்ள உலக நடப்புப் பற்றிய கட்டுரைகள் ஆகிய இரண்டின் விஷயத்திலும் இதுவே உண்மை யாகும், இந்தத் தொகுதி ஷோலகோவின் சொற்பொழிவுகள்

மற்றும் வானொலி உரைகள் ஆகியவை உட்பட, மேற்குறிப்

27