பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த மக்களின் கவனத்துக்கு உரிய தாகும் தகுதியைக் கொண்ட புத்தகத்தை உருவாக்க வேண்டியது உங்கள் வேலை. என்னதான் இருந்தாலும், அந்தப் புத்தகத்துக்குப் பதிலளிக்கக் கடமைப் பட்டவர்கள் நீங்கள்தானே தவிர, வாசகர் அல்ல! இதை என்றும் மறந்து விடாதீர்கள்! இன்று, இழப்பினால் ஏற்பட்ட துக்கமும் வேதனையும் என் இதயத்தில் இன்னும் குன்றாதிருக்கும் இந்த வேளையில், கலினினுடன் நான் நடத்திய கடைசி உரையாடல், என் மனத் தில் மீண்டும் தெள்ளத் தெளிவாக நினைவுக்கு வருகிறது. அந்தத் தேனீ வளர்ப்புப் பண்ணைக் கிழவரோடு அவர் நடத்திய சந்திப்பு என் சிந்தனையைத் தூண்டியது: நமது நாடே ஒரு பெரிய தேனீக்கூடு போலத்தான் உள்ளது; யுத்தத்தால் நா ச ம ா ன தனது பொருளாதாரத்தை மும்முரமாகப் புனரமைத்துக் கொண்டு. மகிழ்ச்சியோடு ஆக்க பூர்வமான நடவடிக்கையில் - சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் தேனீக் கூடு போலத்தான் உள்ளது ... ஆண்டுகள் பல கடந்து செல்லும்; நமது வம்சாவளியினர் செஞ்சதுக்கத்துக்கு வந்து, நமது சகாப்தத்தின் மிகப் பெரும் மனிதரின் சமாதியின் முன்னால் தமது தலைகளைத் தாழ்த்தி வணங்கிச் செல்லும்போது, அவர்கள் தமது நாட்டின் சேவைக்கே தமது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தவரும், உலகில் மக்களின் ஆனந்த வாழ்க்கைக்கான லெனினது போராட்டத்தில் அவரது விசுவாசமிக்க தோழராக இருந்தவருமான மிக்கேல் இவானோவிச் கலினினின் சமாதி முன்பும் அன்பும் நன்றியுணர்ச்சியும் மிக்க . உணர்ச்சிகளோடு கடந்து செல்வார்கள்...' 1945 இலக்கியத்தில் இருபத்தைந்து ஆண்டுகள் இந்தச் சந்தர்ப்பத்தைக் கெளரவிக்கும் முகமாக நடந்த கூட்டத்தில் ஆற்றிய உரை) சோவியத் இலக்கியத்தில் இரண்டு போக்குகள் உள்ளன. சில எழுத்தாளர்கள் நடப்பு நிகழ்ச்சிகளைக் குறித்து மிகவும் துரிதமாக எழுதி விடுகிறார்கள்; அதேசமயம் மற்றவர்களோ நிலை யான மதிப்புமிக்க படைப்புக்களை உருவாக்கப் பாடுபட்டுத் தமது புத்தகங்களை எழுதி முடிப்பதில் ஒப்பு நோக்கில் நெடுங் காலம் எடுத்துக் கொள்கின்றனர், மாபெரும் தேசபக்தப் போரின் போது, நாம் அனைவருமே நிகழ்ந்த சம்பவங்களைக் குறித்து மிகவும் துரிதமாக எழுதினோம்.

258

258