பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடிய முயற்சிகளின் படுமோசமான, தரக்குறைவான தன்மையை மேலும் துலாம்பரமாக எடுத்துக் காட்டின. நமது புத்தகங்களின் தரம் பொதுவாக வீழ்ச்சியடைந்துள்ள தற்கு, யுத்தக் காலத்தில் வளர்க்கப்பட்டுவந்த அவசர கோலப் பழக்கம் ஒன்று மட்டுமே காரணம் அல்ல அல்லது பிரதானக் காரணம் அல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை, எழுத்தாளர்கள் மத்தியில், தரங்களின் விஷயத்தில் திகைப் பூட்டுவதாகவும், முற்றிலும் விவேகத்துக்குப் பொருந்தாத தாகவும் ஏற்பட்ட வீழ்ச்சியும், விமர்சகர்கள் மத்தியில் கையாளப் பட்ட அளவுகோல்களில் ஏற்பட்ட வீழ்ச்சியும் பிரதானக் காரணங்களில் ஒன்று என்பதே என் கருத்தாகும், எழுத் தாளர்கள் தமது தோழர்களின்-சுமாரான நாவல்கள் இருக்கட்டும் நிச்சயமாகப் படுமோசமான நாவல்கள் வெளி வந்த சமயத்திலும் கூட, வியப்பூட்டும் அலட்சியத்தோடும், முற்றிலும் உணர்ச்சியற்ற முகபாவத்தோடும், அவற்றைக் கண்டும் காணாததுபோல் ஒதுங்கிச் சென்றனர். நமது கண்டிப்புக் குறைந்த வாசகர்களின் உள்ளத்தில் மட்டமான ரசனைச் சுவை களை வளர்க்கும், நமது இளம் மக்களைக் கெடுக்கும், தமது மதிப் வீடுகளில் கண்டிப்பானவர்களாகவும் விட்டுக் கொடுக்காதவர் களாகவும் உள்ள தகுதிமிக்க வாசகர்கள் மத்தியில் இலக்கியத்துக்கு ஒரு கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கும் குப்பைகள் வெளிவரு வதை எதிர்த்து, அவர்கள் கோபாவேசத்தோடு வாய்திறந்து பேசவில்லை, நல்லது. சில விமர்சகர்கள் விஷயத்திலோ, நிலைமைகள் இன்னும் மோசமாகவே இருந்தன. மதிப்புமிக்க எழுத்தாளர்- அதிலும் பரிசு வேறு பெற்ற எழுத்தாளர்-ஒருவரால் எழுதப் பட்ட ஒரு கழிசடையான புத்தகம் வெளியிடப்பட்டால், விமர்சகர்களில் மிகப் பலர், இந்தக் கீழ்மையைக் கண்டும் முகம் கோணாமல் இருந்தனர்; மிகப் பல சமயங்களில் அவர்கள் பெரும் மனச் சங்கடத்தோடு வெறுமனே முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர். வாசகப் பெருமக்கள் சமயங்களில் உண்மையிலேயே ஒரு நம்புதற்கரிய திடீர் மாற்றத்தை அதாவது உக்கிரமான விஸ்ஸாரியன் *களாக இருந்த இவர்கள், திடீரென்று வெட்கத்தால் சிவந்து போகும் ஆரணங்குகளாக மாறிவிட்ட அற்புதத்தைக் கண்டனர். சிலர் அவமானத்தால் மௌனமாக உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந் தனர்; அதே சமயம் மற்றவர்களோ, தமது தூய பண்பை

  • இங்கு குறிப்பிடப்படுவது தமது விட்டுக் கொடுக்காத விமர்சனப் போக்கு

களுக்குப் பெயர் பெற்ற பிரபல ரஷ்ய விமர்சகரான விஸ்ஸகரியன் பெலின்ஸ்கி

(1311-18448) ஆவார்.

268