பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சியின் வழிகாட்டலின்படி சொல்பட்ட. காம்சொமால் இளைஞர்கள் உள்நாட்டு யுத்தத்தில் - 6ாதிரியை முறியடித்தனர் என்றும், கூட்டுப் பண்ணைகளை நிறுவப் போராடி, னர் என்றும், சோஷலிசப் போட்டியின் பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, அவர்கள். சோவியத் தொழில் துறையைக் கட்டி யமைத்து வந்தோரின் முன்னணிப் படையில் இடம் பெற்றிருந் தனர் - என்றும், இளம் கம்யூனிஸ்டுக் கழகத்தின் இருபதாவது: ஆண்டுவிழாவின்போது ஷோலகோவ் எழுதினார். போல்ஷிவிஸ்த் தின் வித்துக்கள் வளமான பூமியில் விழுந்துள்ளன என்று எழுதினார் அவர். மிகவும் அண்மையில் நடந்த ஆண்டு விழா, வெஷென்ஸ்காயா விலுள்ள இளம் கோஸாக் கூட்டுப் பண்ணை விவசாயிகளது நாடக அரங்கு தனது இரண்டாவது - ஜென்ம தினத்தைக் கொண்டாடியபோது நிகழ்ந்தது. ஷோலகோன் அப்போது அந்த நாடக அரங்கைக் குறித்து, அது டான் நதிக்கரைக் கிராம மொன்றில் ஏற்றிவைக்கப்பட்ட 46 பிரகாசமான கலைச் சுடர் என்றும், கலையானது பரந்து பட்ட வெகுஜனங்களுக்கு மத்தியில் மேலும் ஆழமாக ஊடுருவும் அளவுக்கு அந்த ஜோதியானது அந்தப் பிரதேசம் முழுவதிலும் ஒளிபரப்ப வேண்டும் என்றும் பேசினார். உலக நடப்பைப் பற்றிக் கூறுபவர் என்ற முறையில் ஷோலகோவினது நடவடிக்கையின் முதற் கால கட்டத்தின் தர்க்க ரீதியான முடிவாக, சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியின் 18ஆவது காங்கிரசில் அவர் ஆற்றிய பிரபலமான உரை அமைந்தது. அங்கு அவர் பிரதிநிதிகளுக்கு சோவியத் யூனியனது சோதர தேசியக் குடியரசுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் பணியைக் குறித்துப் பேசினார். தேசிய , எழுத்தாளர்களின் புதிய குரல்கள் ரஷ்ய இலக்கியப் பிரவாகத் தோடு ஒன்று கலந்து, அதனை வளப்படுத்தி, அதனை உண்மை யிலேயே சகல சோவியத் மக்களின் படைப்பாகவும் ஆக்கியுள்ளன என்றார் ஷோலகோவ். அவர் எடுத்துக் காட்டிய உதாரணங் களில் “தமது எளிமையால் உள்ளத்தை அத்தனை தூரம் கவரும்” ஜாம்புல்லின் கவிதைகளும், ' 'ஜார்ஜியக் கவிதைகளின் 4.மயக்கும் இனிமை' 'யும், சுலெய்மான் ஸ்தால்ஸ்கியின் “'புதுமை !டான, இனிய நாதமிக்க பாடல் வரிகளும் இடம் பெற்றிருந்தன, இதன்பின் அவர் சோவியத் , எழுத்தாளர்களுக்கும் வாசகர் - களுக்கும் உள்ள உறவுகளைக் குறித்து இவ்வாறு கூறினார்:

    • நமது கலையின் மூலம் எந்த மக்களுக்குப் பணி

புரிகிறோமோ அந்த மக்கள், நம்மைப் பற்றிய தமது அபிப்பிரா

20