பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வரும் ஆண்டில் நமது வலிமைமிக்க சோவியத் கலையும் இலக்கியமும் புதிய, அற்புதமான சா தனைகளைப் புரிய வேண்டும் என்று வாழ்த்தவே நான் விரும்புகிறேன். இளம் கலைஞர்களுக்கும் எழுத்தாளர் களுக்கும் அவர்கள் வெகு விரைவில் படைப்பாக்கப் பரிபக்கு வத்தை எய்தவும், பரிபக்குவமடைந்தவர்கள் செம்மைபெறப் 4.Jாடுபடும் தமது முயற்சியில் இளமையிக்க ஆர்வத்தையும் இடை விடாத முயற்சியையும் பெறவும் நான் வாழ்த்துகிறேன். 1956 20 ஆவது கட்சிக் காங்கிரசில் ஆற்றிய உரையிலிருந்து பிரதிநிதித் தோழர்களே! நமது கட்சிச் செயலாளர் தோழர் சுர்கே:rல் ஏற்கெனவே உங்களுக்குத் தெரிவித்துள்ளபடி. ஆறாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான எந்தத் திட்டவட்டமான இலக்குகளையும் சோவியத் இலக்கியம் கொண்டிருக்கவில்லை, இதற்கு மேல் நான் கூறக் கூடியது என்னவெனில், நாம் ஒரு திட்டத்தைக் கொண்டிருந்தாலும் கூட, அது எவ்விதத்திலும் நிறைவேற்றப்பட மாட்டாதீர்; ஏனெனில் நமது வேலையின் தன்மை அப்படி; மேலும், உண்மையைச் சொல்லப் புகுந்தால், எழுத்தாளர்களான நாம்தான், நமது நாட்டில் மிகவும் ஒழுங்கமைக்கப்படாத நபர்களாக இருக்கிறோம் என்பதும் இதற்குக் காரணமாகும்.

  • சோவியத் எழுத்தாளர்களது யூனியனில் 3, 247 உறுப்பினர்

களும், 526 பரீட்சார்த்த உறுப்பினர்களும் உள்ளனர்; அதாவது மொத்தத்தில் பேனாக்களை ஆயுதங்களாகத் தாங்கியவர்களும், கூடுதலான அளவுக்கோ குறைந்த அளவுக்கோ இலக்கியத் திறமையைப் பெற்றவர்க ளுயான 3,773 பேர் உள்ளனர். இது ஒரு பெரும் படைத்தான் என்பதை நீங்கள் கண்டு கொள் ள" முடியும்; என்றாலும் இந்தப் புள்! ளிவிவரம் உங்களுக்கு மலைப்பையோ, மகிழ்ச்சியையோ தரா திருக்கட்டும். இது கேட்பதற்குத்தான் கவர்ச்சிகரமாக உள்ளது; ஆனால் உண்மையில் இந்த . எழுத்தாளர்களது - பட்டியலில் , இறந்துபோன ஆத்மாக்கள் தான் பெரிதும் அடங்கியுள்ள637 , - நமது காலத்தில் சிக்கிக்கோவ்கள்* யாரும் இல்லாதது ஒரு பரிதாபம்தான்; இல்லாவிட்டால், காரியார்த்த மதி நுட்பத்திறன் 1. * பிச்சிக்கேரவ்--கோகோலின் 'இறந்துபோன ஆத்மாக்கள் என்])

- பிர4584 ன கதையின் பிரதானப் பத்திரம்.

286