பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களுக்கு முன்னால் எழுதப்பட்ட புத்தகங்களைக் கொண்டு, நமக்கு நாமே ஒரு இலக்கிய * * நீப்ரோஜெஸ்) அணையைக் கட்டியுள் ளோம்; யாராவது நம்மிடம் அழுத்திக் கேட்டால், நாம் அந்தக் கணமே அந்த அணையின் பின்னால் விரைவாக மறைந்து, அங்கிருந்து கொண்டு தன்னம்பிக்கை குன்றாத அமுத்தலோடு இவ்வாறு கூறுகிறோம்: புத்தகங்களே இல்லை என்று நீங்கள் சொன் னால் அதற்கு என்ன அர்த்தம்? நாங்கள் எழுதுவதே இல்லை என்று நீங்கள் சொன்னால் அது எப்படி? கிளிம் சாம்கினின் வாழ்க்கை என்ன வாயிற்று? செர்கியேவ்--திஸென்ஸ்கியின் நாவல் கள் தான் என்னவாயின? செராஃபிமோவிச்சின் இரும்பு வெள்ளம் எங்கே போயிற்று? கிளாத்கோவின் சிமெண்ட், ஃபதயேவின் முறியடிப்பு ஆகியவை என்னவாயின? வியானோவ், ஃபெதின் ஆகியோரின் ந ர வ ல் க ள் என்னவாயின? ஃபார்மனோவின் சப்பலேவ், ** பான் ஃபெரோவின் புருஸ்தி ஆகியவையெல்லாம் என்னவாயின?" மேலும், நாம் வாசகர்களுக்குப் பிடித்த, காலமும் தப்பிப் பிழைக்க விட்டுள்ள, மேலும் ஒரு டஜன் புத்தகங்களின் தலைப்புக்களையும் படபடவென்று பொரிந்து தள்ளுகிறோம், இந்தச் சகல நிவாரணியான அணையின் வரப்பிரசாதமான திரை மறைவுக்குப் பின்னால் நாம் இன்னும் எத்தனை காலம் உட்கார்ந்து கொண்டிருக்கப் போகிறோம்?

  • முப்பதாம் ஆண்டுகளுக்குப் பின் கழிந்து போயுள்ள

காலத்தில், வசனம், கவிதை, நாடகம் ஆகிய துறைகளில் புதிய அற்புதமான திறமையாளர்கள், நமது பல-தேசிய இன சோவியத் இலக்கியத்தின் அணிகளுக்கும் வந்து குவிந்துள்ளனர். நமது இலக்கியம் அதன் வாழ்நாட்காலம் முழுவதிலும், பல மதிப்பு மிக்க புத்தகங்களை உரு வாக்கித் தந்து, உலகில் தலையாய இலக்கிய டமாக உரிமையோடு இடம் பெற்றது என்பது சொல்லாமலே விளங்கும். என்றாலும், அது த லை ய ா ய இலக்கியமாக மாறியதற்கு, அது கலாபூர்வமான பரிபூரணத்துவத்தில் இதுவரையில் எய்தப்படாத சிகரங்களை எட்டிப் பிடித்தது என்பது காரணமல்ல, மாறாக நாம் அனைவரும்; நமது திறமைக்கேற்பச் சிறந்த முறையில், மனிதகுலத்தின் மிகப்பெரும் நம்பிக்கையான கம்யூனிசத்தின் சகலத்தையும் வெல்லும் கருத்துக்களைப் பரப்பி வருகிறோம் என்பதுதான் காரணம் என்பதை நாம் சகல நேர்மையுணர்ச்சியோடும் கூறித்தான் ஆக வேண்டும். நமது

  • இந்நாவல் , தமிழில் இதே தலைப்பில் மா ஸ்கோ முன்னேற்றப் பதிப்பக

வெளியீடாக வெளிவந்துள்ளது. . 4* இந்நாவல் "சுதந்திர தாகம்” என்ற தலைப்பில் தமிழில் வெளிவந்துள்ளது, வெளியீடு: புதுமைப் பதிப்பகம்,

288

288