பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டியலின் மூலம், போதிய அளவுக்குத் தீர்மானமான முடி வாகவே நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது, விதி விலக்காக இரண்டு அல்லது மூன்று புத்தகங்களைத் தவிர, இந்தப் புத்தகங்கள் பூர்வாங்க விவாதத்தின் போதும்கூட, பரிசீலனையில் தேறிக் கரையேற முடியாதவை. இது ஒரு ஸ் தம்பித நிலையல்ல. எழுத் தாளர்கள் கஷ்டப்பட்டுத்தான் உழைக்கிறார் கள் என்றாலும் தனிச்சிறப்பு மிக்க புத்தகங்கள் ஆண்டுதோறும் வந்து விடுவ தில்லை; மேலும் அவை மிகவும் அடிக்கடி வெளிவந்து கொண் டிருக்க, வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சரியல்ல. கிராஸ் னோதார் போன்ற வளமிக்க பிரதேசத்தைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். அங்கும் கூட மோசமான ஆண்டுகளும், அறுவடையில் தோல்வி களும் ஏற்பட்டுத்தான் வந்துள்ளது. எனவே இலக்கியத்திடமிருந்து மட்டும் நீங்கள் என்ன எதிர் பார்க்க முடியும்? உதாரணமாக, யுத்தம் பற்றிய இலக்கியத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால், அதன் மெதுவான முன்னேற்றத்துக்கு அந்தக் கருப்பொருளின் சிக்கலான தன்மையே காரணமாகும் என்பதே என் கருத்தாகும். கடந்த சில ஆண்டுகளாகத்தான் யுத்தக் கால நினைவுக் குறிப்புக்கள் ஓரளவுக்கு அதிகமான அளவில் வரத் தொடங்கியுள்ளன; மேலும், ஒரு பெரிய நாவலை எழுது வதைக் காட்டிலும், ஒருவரது சொந்த நினைவுகளை எழுதிவிடுவது மிகவும் சுலபமானதாக இருந்த போதிலும் கூட, நமது. மதிப்புக்குரிய தளபதிகள் ராணுவப் பிரமுகர்கள் பலரும், நாம் கூற வேண்டியவற்றை இன்னும் கூறி முடிக்கவில்லை. நான் எனக்கு நானே சால்ஜாப்புக்களைத் தேடிக் கொள்கிறேன் என்று தயவு செய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்: போரைப் பற்றி? எழுதி வருபவர் நான் ஒருவன் மட்டுமே அல்ல. எங்களுக்குப் பிறகும் கூட, வேறு பலரும் அதைக் குறித்து எழுதவே செய்வர். நான் வெறுமனே ஓர் உண்மையைத்தான் கூறுகிறேன். நமது இலக்கிய விவகாரங்களைப் பற்றிய விரிவான ஆய்வுரையில் இறங்கி நான் உங்களைப் போரடிக்க விரும்பவில்லை, மேலும் அது ஒன்றுக்கு மேற்பட்ட பலர் எடுத்துக் கொள்ளக் கூடிய ' விஷLIKOாகும். இந்த ஆண்டில் பின்னால் நடைபெற விருக்கும் எங்களது எழுத்தாளர் காங்கிரசினால், இந்த விஷயத்தை நாங்கள் முழுமையாக ஆராயப் புகுவோம். -சமுதாய வாழ்க்கையில் எழுத்தாளரின் ஸ்தாபனம் என்று வழக்கமாகக் கூறப்படுவதைப் பற்றி மட்டும் சில வார்த்தைகள், நமது நிகழ்கால சமுதாய வாழ்வுக்கே உரிய தனித்த' காட்சி 350.