பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவரும் தமது இஷ்டம்போல் சுதந்திரமாக அவதூறு செய்ய அனு மதியாத வாறு, அதனை நாம் பொன்னே போல் போற்றிப் பாதுகாத்து வருகிறோம். ஆயினும், மனிதாபிமானத்தின் பெயரைக் கூறி, தீர்ப்பு கடுமையானது என்று ஒப்பாரி வைத்துவரும் சிலரும், இருக்கவே செய்கின்றனர். நமது சோவியத் ராணுவத்தின் கட்சி ஸ்தாபனத் தி லிருத்து வந்துள்ள பிரதிநிதிகளின் கோஷ்டியொன்றை நான் இங்கு காண்கிறேன். அவர்களது படைப்பிரிவுகள் ஒன்றில், துரோகிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நான் 87'லப் பார்க் கிறேன். மனிதாபிமானமும் மாய்மாலமான அழுகுணித்தனமும் முற்றிலும் வெவ்வேறான விஷயங்கள் என்பதை நமது போர் வீரர்கள் வேறு எவரைக் காட்டிலும் மிக நன்றாக அறிவர். நான் வேறோன்றைப்பற்றியும் சிந்தித்துப் பார்க்கிறேன், கண்டிப்பாக வரையறுக்கப்பட்ட கிரிமினல் சட்ட ஷரத்துக் களின்படி வழக்குகள் விசாரிக்கப்படாமல், புரட்சிகர நீதியின் மூலமே பெரிதும் விசாரிக்கப்பட்டுவந்த அந்த அறக்கொணாது 1920ஆம் ஆண்டுகளின்போது இந்தக் காரியம் நிகழ்ந்திருக்கு மானால், அப்போது இந்தக் கட்சி மாறிகளுக்கு, ஓ! மிகவும் வே துவிதமான தண்டனை யல்லவா வழங்கப்பட்டிருக்கும்! ஆனால் இங்கோ - நீங்கள் நம்பினால் நம்புங்கள்-தீர்ப்பின்

    • கடுமை'யைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்!

அவதூறு பொழியும் இந்த நபர்களுக்கு ஆதரவாகப் பேசும் முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கும் நான் இதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்; எங்கள் நாட்டில் விமர்சனத்தின் பாது காப்பைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டும். நாங்கள் விமர்சனத்தை ஆதரித்து வருகிறோம்; வளர்த்து வருகிறோம். மேலும், இப்போதைய காங்கிரசிலும்கூட, மிகவும் கடுமையான விமர்சனங்கள் கூறப்பட்டுள்ளன. என்றாலும், அவதூறு விமர்ச ன ம் ஆகாது: குட்டையிலிருந்து அள்ளிய சேறு, ஓவியரின் தூரிகை யிலிருந்து வழித்த வர்ணமாகி விடாது . தோழர் களே, இலக்கியம் சம்பந்தமான பிரச்சினை களைப் பேசி நான் உங்கள் கவனத்தை நெடுநேரம் சோதித்துவிட்டேன். எழுத்தாளர்களான நமக்கு இலக்கிய விவகாரங்களே எல்லா?" விஷயங்களின் முதலும் முடிவும் ஆகும் என நீங்கள் கருதிவிடக் கூடாது என நான் விரும்புகிறேன், அவற்றைத் தவிர, நமக்கு வேறு பல அக்கறைகளும் உண்டு. உதாரணமாக, நூலாசிரியர் லியோனித் லியானோவ் தமது வாழ்வில் பல ஆண்டுகளை க் காடுகளைப் பாதுகாக்கும்-ர ஷ்யக் கிராமப்புறத்தின் அழகையும் 354