பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வத்தையும் பாதுகாக்கும்-போராட்டத்தில் ஈடுபடுத்தி யுள்ளார். ஏனைய பிரச்சினைகளும் நமது மனத்தை ஆட்கொள் கின்றன. இப்போது நான் பேசப்போகும் விஷயம் இலக்கியத் தோடு எந்தச் சம்பந்தமும் கொண்ட விஷயம் அல்ல. நாம் பைகால் ஏரியின் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம், மேலும் நமது திட்டமிடுதலைப் பற்றியும் சில வார்த்தைகள் கூற என்னை அனுமதியுங்கள். மார்ச் 5 அன்று பிராவ்தா, வி, தித்தோவ் எழுதியுள்ள

  • * நிர்வாகத்துறையின் கற்பனாவாதிகள் என்ற கட்டுரையை

வெளியிட்டிருந்தது. சுருக்கமாக, அந்தக் கட்டுரையில் கூறப் பட்டிருந்த விஷயம் இது தான் ; முன்னொரு காலத்தில் ரஷ்ய சோவியத் சோஷலிச சமஷ்டிக் குடியரசின் உணவுத் தொழில் துறை அமைச்சகம், கல்யாஜின்னில் கா ய்கறிக ளைக் காயவைக்கும் ஒரு தொழிற்சாலையைக் கட்டத் தீர்மானித்தது. உண்மையில் அந்தத் தொழிற்சாலை கட்டவும் பட்டது; ஆயினும் அதற்குத் தேவையான மூலப்பொருள்களை அதற்குப் போதிய அளவுக்கு வழங்க முடியவில்லை என்று தெரிய வந்தது. எனவே அதனை ஸோயாப் பருப்பு ஸாஸ் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாற்றி விடத் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு மாற்றவும் பட்டது. அதன் பிறகோ மாஸ்கோவிலும் செர்ப்புக் கோவிலுமுள்ள தொழிற்சாலைகள், மாஸ்கோவிலும் மாஸ்கோப் பிராந்தியத் திலும் வசிக்கும் அனை வரும் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு, எல்லா லோயாப் பருப்பு ஸாளையும், தாமே சப்ளை செய்து வந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின் அதனை ஒரு பால் தொழிற்சாலை யாக மாற்றுவதற்காக மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு ஆலைச் சாதனங்கள் வாங்கப்பட்டன; அந்த ஆலையை அங்கு நிறுவி முடிப்பதற்கு முன்னால், கோழிக்கறியைப் பாக்கிங் செய்யும் ஆலையாக அதனை பாற்றினால் நல்லது என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்காக வங்கியிலிருந்து ஒரு பெரிய கடன்தொகையும் வழங்கப்பட்டது. ஆயினும் இதன் பின்னர் மீண்டும் அந்த ஆலையின் உற்பத்தித் திறனானது, மூலப்பொருள் கிட்டக்கூடிய அளவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமானது என்று தெரிய வந்தது. இந்தத் தொழிற்சாலை பத்தாண்டுகளாக. இருந்து வந்துள்ளது; மேலும், இதன் பல்வேறு உருமாற்றங் களுக்காகக் கிட்டத்தட்டப் பத்து லட்சம் ரூபிள் களும் செலவாகி யுள்ளன. இந்த உண்மையின் பரிமாணம் ஒருவேளை அத்தனை மிகவும் பெரிதானதாக இல்லாதிருக்கலாம்; ஆயி ரம் இவ்வாறு கேள்வி கேட்க இடம் உண்டு என்றே 'ஒருவர் உணர முடியும்; 45 என்ன விதமான திட்டமிடுதல் இது?” 355 -