பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரைவாக வெற்றிக் குறைந்து வரும் நிலையில், நீர் நிலைகளில் மீன் பிடிக்கும் பிரச்சினை, அதன் அதியவசரத் தன்மை அனைத்தோடும் நம்மை விரைவிலேயே எதிர் நோக்கி விடும்.

  • எனது பேச்சில் நான் இலக்கியத்துக்கு எவ்வளவு கவனம்

செலுத்தினே னோ, அவ்வளவு கவனத்தை மீன் பிடி விவகாரத் துக்கும் செலுத்தி விட்டேன். எனினும் இது விஷயத்தில் நமது கண்ணுக்குத் தெரிவதைக் காட்டிலும் மேற்கொண்டு எதுவுமே இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக அப்படியல்ல, நாம் ஏராளமான', மீன் களை-கடல்--ரோச், விம்பா-விம்பா, ஹெர்ரிங் போன்ற மீன் வகைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், கடல் பாசி மட்டும் நமக்கு வேண்டாம், கடல் பாசியின் ருசியை விரும்புபவர்கள் அதனைத் தின்றுவிட்டுப் போகட்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் மீன்களைப் பாதுகாத்து வருவதை எல்லாவிதத்திலும் ஆதரிக் கிறேன்; ஏனென்றால் அதில் ஏராளமான பாஸ்பரஸ் இருக்கிறது; அது மூளைக்கு நல்லது என்பதும், அது மூளையை மிக வும் தீவிர மாக வேலை செய்ய வைக்கிறது என்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், என்னதான் இருந்தாலும், மூளைக்கான இந்தப் பொருள், எழுத்தாளர்களுக்கு மட்டும் தானா தேனவப் படுகிறது? நீங்கள் என்னை அனுமதித்தால், திட்டமிடுதலைப் பற்றியும் மேலும் சில வார்த்தைகள். நான் கூற வரும் விஷயத்தை நிரூபிக்க ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் மேற்கோளாகக் கூறுகிறேன். பெரும்பாலும் நான் திட்டமிடுதலுக்கு ஆதரவாளன் தான்; என் றாலும் நான் அமோக வளத்துக்கும் ஆதரவாளனாக இருக்கிறேன், ராஸ்தாவ் பிராந்தியத்திலுள்ள கூட்டுப்பண்ணைகள் மற்றும் அரசாங்கப் பண்ணைகளுக்கு அவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்னும் இரண்டாயிரம் டிராக்டர்கள் தேவை, நான் ஆதரிக்கின்ற திட்டமிடும் முறை என்னவென்றால், இந்த டிராக்டர்களை நேர்மையான வழிகளிலோ அல்லது நேர்மை யற்ற வழிகளிலோ பெற்று வருவதற்காக, எங்களது பிராந்திய அதி காரிகளை நாங்கள் மாஸ்கோவுக்கு அனுப்பி வைக்க

வேண்டாத விதத்தில், விவசாயத் துறை அமைச்சர் தோழர்

மத்ஸ்கேவிச் தாமாகவே இந்த டிராக்டர்களை இந்தப் பண்ணை சுளுக்கு அனுப்பிவைக்க முன் வரும் முறையேயாகும். ஆனால் இப்போது என் ஜன நடக்கிறது? இதனைப் பெறுவதற்காக, இந்த நபர்கள் மாஸ்கோவுக்குப் புறப்பட்டுச் செல்வதைக் கவனித்துக் கொண்டிருக்கும் நானும், அங்கே புறப்பட்டுச் செல்கிறேன். ' 359