பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்பாகவே எனது கோரிக்கை அளவில் மிகவும் குறைந்தது தான் : நான் ஒரு புதிய பள்ளியைத் தொடங்க விரும்புகிறேன், அல்லது கூட்டுப் பண்ணைக்குக் கூரை வேய்வதற்காக கூரைத் தகடுகளையோ அல்லது மரப்பலகைகளை யோ பெற்று வர விரும்புகிறேன். நல்லது. இதனால் நான் அமைச்சரிடம் சென்று இவ்வாறு கூறுகிறேன் : தோழர் அமைச்சரே, கூட்டுப் பண்ணை மாட்டுத் தொழுவங்களின் மீது கூரை வேய்வதற்கு மூவாயிரம் கூரைத் தகடுகளை எங்களுக்குக் கொடுத்து உதவுங்கள். * ' அமைச்சர் இவ்வாறு பதிலளிக்கிறார்: “ஆனால் நமது பொருளாதாரம் ஒரு திட்டமிட்ட பொருளாதாரமாயிற்றே. இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? திட்டத்தின் கீழ் உங்களுக்கு என்ன கிட்ட வேண்டுமோ அவ்வளவையும் நீங்கள் ஏற்கெனவேயே பெற்றுக் கொண்டு விட்டீர்களே." இதற்கு நான் அவ ரிடம் இவ்வாறு கூறுகிறேன்: 67னக்குப் புரியத்தான் செய்கிறது. ஆனால் பசுமாடுகளுக்கும், அதைக் காட்டிலும் கன்றுகளுக்கும், தாங்கள் ஏன் இலையுதிர்கால மழையில் நனையவும், மாரிக்காலப் பனியில் உறைந்து விறைத்துப் போகவும் வேண்டும் என்பதுதான் புரியவே மாட்டேன் என்கிறது. தகடுகளால் கூரைகளை வேய்வதற்கு, அனைவு பகட்டாகவோ அழகாகவோ இருக்கின்றன என்பது காரணம் அல்ல; மாறாக, அவை சிக்கனமாக இருப்பதே காரணமாகும். மேலும், மாட்டுத் தொழுவங்களின் மீது வைக்கோலைக் கொண்டு கூரை வேய்ந்தால், ஏராளமான கால் நடைத் தீவனத்தைச் சேகரித்து வைப்பதற்கான ஊக்கமே விவசாயி களுக்கு இருக்காது. ஒருவேளை கால் நடைத் தீவனம் குறைந்து 'போய்விட்டால், அவர்கள் பசுமாடுகளுக்குக் கூரையையே எப்போதும் தீவனமாகக் கொடுத்து வர முடியும்; ஆனால் தகட்டுக் கூரையாக இருந்தால், அது அப்படியே பத்திரமாக இருக்கும். மேலும், நாம் இடையறாது இவ்வாறு கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு வருவதன் காரண மாக, நமது' குணத்திலும் நமது உருவத் தோற்றத்திலும்கூட விரசமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் காண்கிறோம். அந்தோ, எழுத்தாளரின் பெருமிதமான கம்பீரத்துக்கும் பழைய போர் வீரரின் நிமிர்ந்த தோற்றத்துக்கும் என்ன கதி நேர்ந்து விட்டது! கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டே நமது முதுகு வளைந்து போய்விட்டதை நாம் காணத் தொடங்குகிறோம்; மேலும், இனியும் நாம் அந்த அமைச்சகரைச் சம்பிரதாய பூர்வமான முறையில், தோழர் அமைச்சரே? என்று விளிப்பதில்லை; : LATறாக, அவரது தயவைக் கோரும் 3 63