பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெஷென்ஸ்காயாவிலுள்ள கூட்டுப் பண்ணைக் கோ ஸாக் இளைஞர்களது நாடக அரங்கின் முதலாவது ஆண்டுவிழா கூட்டுப் பண்ணைக் கோஸாக் இளைஞர்களது வெஷென்ஸ் காயா நாடக அரங்கு தனது வாழ்வின் முதல் ஆண்டில் எவ்வளவோ சாதித்துள்ளது. பரிசீலனைக்குரிய அந்த ஆண்டு நிச்சயமாக வீணாகிவிடவில்லை; இதனை அண்மைக்கால நாடகத் தயாரிப்புக் களைக் கொண்டே தீர்மானித்து விடலாம். நாடகக் காட்சிகளில் நடிகர்களுக்கிடையே நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது; நடிப்பும் மேலும் பக்குவமடைந்திருப்பது கண் கூடாகத் தெரிகிறது. என்றாலும் கூட, நடிகர்களும் நடிகையரும் தாம் இனியும் மேற் கொண்டு முன்னேற இடமே இல்லை. என்று தமக்குத் தாமே நினைத்துக் கொண்டு, தகுதிக்கு மீறிய இறுமாப்புக்கு இரை யாகாதிருந்தால், சுய திருப்தி என்ற படுமோசமான நோய் அவர் களைப் பற்றிக் கொள்ளாதிருந்தால், இந்த நாடக அரங்கு என்ன சாதித்திருக்கக் கூடுமோ அதனோடு ஒப்பிடும்போது இது மிகவும் அற்பமானதே. அவர்கள் தமது திறமையைச் செம்மையாக்கு வதற்கு முன்னெப்போதைக் காட்டிலும் அதிகமாகச் சிரமப் பட்டுக் கற்றாக வேண்டும்; கலையின் உண்மையான சிகரங்களை எட்டிப் பிடிப்பதற்கு முன்னால் அவர்கள் ஒரு நெடிய, கடுமை யான மலையேற்றத்தை ஏறி முடிக்கத்தான் வேண்டும். நாம் சரிவரவே எண்ணிப் பெருமைப் படுகின்ற நமது கூட்டுப் பண்ணைக் கோஸாக் இளைஞர்கள் இந்த முயற்சியில் வெற்றி பெற நான் வாழ்த்துக் கூறுகிறேன். 1937 எங்கள் இதயங்கள் அனைத்தோடும் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் அன்பார்ந்த சோவியத் யுவர் களே! யுவதிகளே! காம்சொமால் தனது இருபதாவது பிறந்த தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது; இது நான் தவற விட முடியாத ஒரு சந்தர்ப்பமாகும். குதூகலித்துக் களிக்கும் இளம் மக்களின் கூட்டமொன்றைக் கடந்து செல்லும் ஒரு வயதான மனிதர், ஒரு கணம் நின்று அதனைப் பார்ப்பார்; அக்கார்டியன் வாத்தியத்தில் வாசிக்கப்படும் கீதத்தை அவர் கேட்கும் போதும், அந்த மகிழ்ச்சி பொங்கும் இளம் முகங்களை அவர் புன்னகை. 382