பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெஷென்ஸ் காயாவிலுள்ள கூட்டுப்புண்ணைக் கோஸாக் இளைஞர்களது நாடக அரங்கின் - இரண்டாம் ஆண்டு விழா தோழர்களே, இன்று நாம் கூட்டுப்பண்ணைக் கோஸாக் இளைஞர்களது வெஷென்ஸ் காயா நாடக அரங்கின் இரண்டாம் ஆண்டு விழா வைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். பெரிய கலாசாரச் கேந்திரங்களிலிருந்து வெகு தொலைவில் தள்ளியிருந்த இந்தத் தூரா தொலை ஸ்தானித்ஸாக்களிலும் பண்ணை வீடுகளிலும் ஒரு காலத்தில் நிலைமைகள் எவ்வாறு இருந்தன என்பதை நீங்கள் அனைவரும் நினைவுகூர முடியும், அந்தக் காலத்தில் தொழிலூக்கப் மிக்க யாரோ ஒரு நாடகக் கம்பெனி அதிபரால் அவசர கோலத்தில் ஒன்று திரட்டப்பட்ட 'டூரிங்' நாடகக் கோஷ்டிகள் அவ்வப்போது வந்தன; அவர்களது கவலையெல்லாம் எவ்வளவு பணம் பார்க்க முடியுமோ அவ்வளவு பணம் பார்ப்பதாகவே இருந்தது. அவர்களுக்கும் கலைக்கும் எந்தச் சம்பந்தமும் இருந்த தில்லை; அவர்கள் செய்ததெல்லாம் கலையின் வருந்தத்தக்க போலி வடிவத்தை வழங்குவதாகவே இருந்தது. அல்லது 6 "போரினால் முடமாகிப் போனவர் எவராவது ஒரு வர் நமத வட்டாரங்களில் திடீரென்று காட்சியளிப்பார், முடமாகிட போனவர்களுக்காக அமைக்கப்பட்ட ஏதோ ஒரு தொழி! கூடத்தில் கரண்டிகளை உற்பத்தி செய்து தள் ளும் வேலையில் மனம் சலித்துப்போன அவர், வேடிக்கை காட்டும் வித்தைக்கார் ராக மாறத் தீர்மானித்திருப்பார். அவர் சீட்டுக்கட்டு வித்தைகள் மற்றும் பிற வித்தைகளைக் காட்டிக் கொண்டு, பல ஸ்தானித்ஸால் களிலும் பண்ணை வீடுகளிலும் சுற்றியலைந்து கொண்டிருப்பார் ஊர் ஊராகச் செல்லும் இசைவாணர்களும் அவ்வப்போது நம்மைத் தேடி வருவார்கள்; அவர்கள் இசைத்த இசை கர்ன கடூரமாகத்தான் இருந்தது; நமது வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கூறியதுபோல், அது உண்மையில் நம்மைத் திSைறவு நீடிப்பு தாகத்தான் இருந்தது. மேலும் இங்கு வசித்துவந்த மக்களில் மிகப் பலர் தம் வாழ்நாளில் ஒரு நடிகரையே கண்ணால் கண்ட தில்லை; நாடக அரங்கு என்றாலே அவர்களுக்கு என்னவென்; தெரியாதிருந்தது . கூட்டுப்பண்ணை விவசாயிகள் மட்டுமல்ல பள்ளிக்குச் சென்று படித்துவந்த நமது சிறுவர் சிறுமியரும்கூட ஒரு நாடக அரங்கைச் சென்று காணும் வாய்ப்பே இல்லாம வளர்ந்து வந்தனர், இந்த நாடக அரங்கு, நமது கட்சியும் நமது சோவியத் அரசாங்கமும், மக்கட் தொகையினரின் கலாசார அபிவிருத்தியில்