பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம். கற்பனை செய்து பார்க்க முடியும்: இந்தக் கம்யூனிஸ்டு எழுத்தாளர்கள் உண்மையில் எப்படியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்களேன் என்று அவர்கள் கூறுவார்கள். தமது தொழிலின் உணர்வு கோருவதைப் போல் மனிதத் தன்மையைப் புலப்படுத்து வதற்குப் பதிலாக, அவர்கள் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று கோருகிறார்களே!-எப்போதும் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து. தடக்கும் அந்த முதலாளித்துவப் பேனா -ஓட்டிகள் நிச்சயமாக இப்படித்தான் . எதையாவது எழுதித் தீர்ப்பார்கள். கூலிக்கு மாரடிக்கும் இந்தக் கிறுக்கல் எழுத்தாளர்களுக்கான பதிலும் என்னிடம் தயாராக இருக்கிறது: "மரியாதையே இல்லாத கனவான்களே, வரிந்து கட்டிக்கொண்டு வராதீர்கள்; இங்கு யாரும் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்று சதி செய்யவில்லை; சூழ்ச்சிகள் புரையோடி நச்சுப்பட்டுப்போன சோ ஷ் டி,வா:'தி களின் ரத்தத்தை எவரும் விரும்பவில்லை; மாறாக, மக்களுக்கும் கட்சிக்கும் எதிராகத் தாம் இழைத்துள்ள குற்றங்களுக்கு அவர் களே பதில் சொல்ல வேண்டும்; பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அது தான் உலக நியதியாகும்." தோழமையைப் போலவே, மனிதத் தன்மையும், நாமும், முதலாளித்துவ வாதிகளும் அல்லது அவர்களது உலகக் கண்ணோட்டத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் நபர்களும், வெவ் வேறு விதமாகப் புரிந்து கொள்ளும் மற்றொரு கருத்தாகும், பல் வைத்தியரைப் போல் நாமும் ஒரு வலிமையும் ஆரோக்கியமும் மிக்க உடம்புக்குத் தொல்லை கொடுத்து வரும் சொத்தைப் பல்லைப் பிடுங்கி எடுக்கிறோம்; இதன் மூலம் மனிதத் தன்மை மிக்க ஒரு செயலைப் புரிகிறோம், ஒப்பு நோக்குக்காக, இங்கு மனிதத் தன்மை பற்றிய வேறுபட்ட கருத்துக்கு ஓர் உதாரணம் கூறுகிறேன். நான் இத்தாலிக்குச் சென்றிருந்த போது , ரோம் நகரின் புறநகர்ப் பகுதிகளில் ஒரு சிங்காரமான மாளின க என்" கவனத்தைக் கவர்ந்தது. அது பூனை களுக்கான ஆரோக்கிய இல்லம் என்று என்னிடம் கூறினர், பூனைகள் என்றால், அந்த நகரின் சேரிகளில் வசிக்கும் பசிக் கொடுமைக்கும் போஷாக்குச் சத்துக் குறைவுக்கும் இரையாகியுள்ள பிள்ளைகள்--குறைந்த ஊதியம் பெற்று வரும் அல்லது வேலையில்லாது திண்டாடி வரும் இத்தாலி நாட்டுத் தொழிலாளர் களின் குழந்தைகள்-பிடித்து விளையாடுகின்ற எலும்பும் தோலுமான சொறி, பிடித்த பூனைகள் அல்ல; மாறாக, இத்தாலிய நாட்டு கோடீசு வரர்களும் கோடீசுவ ரிகளும் சொந்தமாக வைத்து வளர்த்து வரும் வழுவழுப்பான செல்லப் பிராணிகள்தான் அவை. - சோம்பேறித்தனத்தாலும், உண்டு கொழுத்துப் போன 408