பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாகவே உள்ளன. நாம் நமது எழுத்துக்களில் பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் கூறுகிறார்கள். பின் அவர்கள் நாம் எப்படியிருக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்? உதாரணமாக, நான் ஒரு சோவியத் போர் வீரரைப்பற்றி, எனக்கு எல்லையற்ற விதத்தில் அருமையும் பெருமையும் மிக்க ஒரு மனிதரைப்பற்றி, எழுதுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவரைப்பற்றி நான் எப்படி மோசமாகக் கூற முடியும்? அவர் அடிமுதல் முடிவுரையில், அவர் அணிந்துள்ள பக்கவாட்டுத் தொப்பியிலிருந்து காலில் அணிந்துள்ள பட்டித் துணிகள் வரையிலும், முழுக்க முழுக்க என்னுடையலர்; அவரது முகத்தில் விழுந்துள்ள கரும்புள்ளிகள் அல்லது அவரது குணாம்சத்தில் உள்ள சிற்சில குறைபாடுகள் போன்ற விஷயங்களை நான் கவனிக்க முயல்வதில்லை. மேலும், இத்தகைய விஷயங்களை நான் கவனித்தாலும், அந்த விசித்திரமான சின்னக் கரும் புள்ளிகளோடும், அவரது குணாம்சத்தில் தென்படும் அற்பமான குறைபாடுகளோடும் சேர்த்தே, வாசகர்கள் அவரை நேசிக்க முன்வரக்கூடிய விதத்திலேயே நான் அவரைப்பற்றி எழுத முயல்கிறேன். . ' இங்கு நான் எனக்கு முன்னால் காண்கின்ற நபர்களில் மிகப்பெரும்பாலோர், வாழ்க்கை அனுபவத்தையும் பிற அனுபவங்களையும் ஏராளமாகப் பெற்றுள்ளவர்கள். சில சமயங் களில் ஒரு மனிதனுக்கு ஒரு சாதாரணப் பெண்ணின் முகத்தில் தென்படும் புள்ளிகள், உலகிலுள்ள மா சு மருவேயற்ற, பட்டுப் போல் மிருதுவான, அழகிய முகங்கள் அனைத்தையும் காட்டிலும் மிக வும் மதிப்பிடற்கரியவையாக மாறிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் அவர் காதலிக்கும் பெண்ணின் கண்களின் 'ஓரங்களிலிருந்து இனம் காட்டும் களைத்துப்போன சுருக்கங்கள், ஒரு சரசமாடும் இளம் யுவதியின் பளிச்சிடும் கவலையற்ற புன்னகையைக் காட்டிலும் அவருக்கு மிகவும் அழகானவை யாகத் தோன்றும். மேலும் சில சமயங்களில், நீங்கள் மீண்டும் ஒரு முறை என்றுமே திரும்பிப் பார்க்கக் கூட விரும்பாத ஒரு பெண்ணுக்கு, மிக மிக அழகான ஆடவன் ஒருவன் காதலனாகக் கிட்டியிருப்பதைக் கண்டு, நீங்கள் அப்படியே திக்பிரமை பிடித்துப் போவதும் உண்டு! வாழ்க்கையில் எல்லாவிதமான விஷயங்களும்தான் நிகழ்கின்றன; இதனை நான் நன்கறிவதைப் போல் நீங்களும் அறிவீர்கள். எனவே ஓர் எழுத்தாளர்--அவர் ஓர் உணர்ச்சியற்ற மரக்கட்டை” ' யாக இல்லாதிருந்தால்- தாம் நேசிக்கும் நபர்களைப் பற்றி உணர்ச்சியற்ற அலட்சியத் தோடு எவ்வாறு எழுத முடியும்?" 416