பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர் படை பதிப்பகத்தின் பார்வையாளர் பதிவேட்டில் எழுதப்பட்ட வாசகம் இளைஞர் படை அலுவலகத்துக்கு நான் எப்போதும் மகிழ்ச்சியுடனேயே வருகிறேன். இந்த இளம் மக்களோடு நான் இருக்கும்போது, சில ஆண்டுகளை நான் உதறித் தள்ளி விட்டது போலவே உணர்கிறேன்.... 6-3-65 'எம், ஷோலகோவ் நாட்டுக்கு இளம் உழைப்பாளிகள் தேவை இளைஞர்களுக்கு ஆற்றிய ஓர் உரையிலிருந்து) - ...... இங்கும் பிற இடங்க ளி லும் இளம் மக்கள் பல காரணங். களுக்காகப் பண்ணைத் தொழிலை விட்டு விலகிக் கொண் டி ருக்கும் காரணத்தால், கிராமப்புற இளைஞர்கள் உள்ளத்தில், விவசாயியின் உழைப்பின் பாலும், விவசாய உற்பத்தித் துறையில் ஆற்றும் பணியின் பாலும், ஒரு பற்றையும் மதிப்பை யும் நாம் உருவாக்கி வளர்த்தாக வேண்டும். நான் பல வெளி நாடுகளில் பயணம் செய்திருக்கிறேன்; ஸ்வீடன், நார்வே, டென் மார்க் ஆகிய நாடுகளிலெல்லாம் இதே நிலைமைதான்; உண்மையில் நகர்ப்புறத்துக்குக் குடிபெயர்ந்து செல்லும் வேட்கை எங்கணுமே தென்பட்டு வருகிறது. பண்ணை வீட்டு முறை நிலவி வரும் பின்லாந்திலும் ஸ்வீடனிலும் இந்த வேட்கை நிலவு வதை என்னால் புரிந்து கொள்ள முடியும். அங்கு பெரிய கிராமங்கள் இல்லை; மக்கள் தூரா தொலைவில் பிரிந்து பிரிந்து வாழ்கின்றனர்; வீடுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளன; எனவே அங்கு இந்த வேட்கை நிலவுவதை எளிதில் புரிந்து கொள்ளவும் உணர்ந்தறியவும் முடியும், திரைப்படங்களைக் காண வெளியில் சென்றால், பன்னிரண்டு அல்லது பதினைந்து கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தாக வேண்டும்; மேலும், இளம் மக்கள் ஒரு மன்றத்திலோ அல்லது வேறு எங்கோ ஒன்று கூடுவது என்ற விஷயத்தைப் பொறுத்த வரையில், இத்தகைய பிரச்சினைக்கே அங்கு இடமில்லை. நமது நிலைமைகளில் இந்த வேட்கைக்கு எந்த நியாயமும் இருக்கவில்லை, இங்கு நாம் கூட்டுப்பண்ணைகளிலும் அரசாங்கப் பள்ளணைகளிலும் உழைத்து வரும் ஏராளமான ஊழியர்களைக் கொண்டிருக்கிறோம்; மேலும் நாம் திரைப்பட அரங்குகளையும் 421