பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வாய்ந்த சம்பவமாக விளங்கும் உங்களது காங்கிரசில் உங்களுக்கு வணக்கம் கூறுவதை நான் எனது மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன். கடந்த நாற்பது ஆண்டுகளில் எவ்வளவோ காரியங்கள் நிகழ்ந்துள்ளன; ஒரு கூட்டுப் பண்னைக் கிராமத்தின் தோற்றத் திலும் வாழ்க்கையிலும், மிகவும் முக்கியமாக, கூட்டுப் பண்ணை விவசாயிகளது மனோபாவத்திலும், எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இது பொதுவாகத் தெரிய வந்துள்ள உண்மை; இதனைக் குறித்து நான் இன்று பேச விரும்பவில்லை, ஆரம்ப காலத்தை, பல ஆண்டுகள் அனைத்துக்கும் முந்திய அந்தக் காலத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, ஒருவர் இப்படித்தான் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்ப்பார்!, நமது நாட்டின் அபிவிருத்தி மார்க்கத்தை யார் தீட்டிக் கொடுத் தாரோ, யாருடைய பிறந்த தின நூற்றாண்டு விழாவை நாம் விரைவில் கொண்டாடப் போகிறோமோ, அந்த மனிதர்தான் எத்தகைய வியத்தகும் தொலைநோக்கைக் கொண்டிருந்திருக்க வேண்டும்! மேலும், நாட்டின் தொழில் - மயமாக்கப் பணியை நிறைவேற்றி வந்த அதே சமயத்தில், ஒரு கூட்டுப்பண்ணை முறைமையை நிலை நாட்டுவதிலும் முனைவதற்காகத் தீட்டப் பட்ட எல்லாவற்றையும் சாதித்து முடிப்பதற்குத்தான் நமது கட்சிக்கு எத்தகைய வியத்தகும் மனோவுறுதியும் பலமும் இருந் திருக்க வேண்டும்! ஒரு பெரிய போரின் மின்னல் வீச்சுக்கள் தூரா தொலைவி லுள்ள அடிவானங்களில் ஏற்கெனவே தட்டு மறித்து விளையாடிக் கொண்டிருந்தன; மேலும்,. - போர் வந்தேவிட்டபோதோ, கூட்டுப் பண்ணைகள் ராணுவத்துக்கும். தொழிலாளி வர்க்கத்துக் கும், நாடு முழுவதற்கும் உணவு. வழங்கக் கூடியதாகவே இருந் தன. ஆயாச மூட்டிய போரின் 'நான்கு ஆண்டுகளும் நமது வயிற்றை இறுக்கிக் கொள்ளச் செய்தன; என்றாலும் நாம் தாக்குப் பிடித்து நின்றோம்; வென்றோம்: மகா சமுத்திரத்துக்கு அப்பாலுள்ள அன்பான மாமாவிடம் நாம் ரொட்டிக்காக மடிப் பிச்சை கேட்டுப் போகவில்லை. இதனை நாம் அடிக்கடி நினைவு கூர்கிறோம்; ஆயினும், கூட்டுப் பண்ணை விவசாயிகளுக்கு நாம் அடிக்கடி நன்றி கூறுவது, நாம் செய்து வர வேண்டிய ஒரு காரியமேயாகும் என்றும், அவர்கள் முன்னால் அடிக்கடி தலை வணங்குவதால், எவரது முதுகும் முறிந்து போகாது என்றுமே நான் கருதுகிறேன். இந்த நாட்களில் நாம் அனைவரும் தோழர் பிரெஷ்னேவின் கூர்கிறோம்; விவசாயிகள் கூறுவது.