பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரை, நமது இதயத்தில் பதித்துள்ள முத்திரையோடுதான் வாழ்ந்து வருகிறோம். அதில் அடங்கியிருந்த உள்ளத்தைக் கிளறும் உண்மைகளும், புள்ளி விவரங்களும், முடிவுகளும் சிந்திக்க வைக்கின்றன, உதாரணமாக, மக்கட் தொகையின் தவா விகிதச் சராசரி அளவில் சாகு படிக்கேற்ற நிலம் எவ்வளவு உள்ளது என்ற புள்ளி விவரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், நமது உள்ளங்களின் அப்பாவித்தனம் காரணம!ாக, நம்மிற் பெரும்பாலோர் நிலவளத்தில் நாம் அளப்பரிய செல்வந்தர் களாக இருப்பதாகத்தான் எண்ணிக் கொண் டிருந்தோம்; ஆனால் நாம் ஒன்றும் உண்மையில் அத்தனை வளம் படைத்தவர்களாக இல்லை என்பதே எதார்த்தத்தில் புலனாகின்றது , இது முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றாகும்; ஏனெனில், இது கூட்டுப் பண்ணை விவசாயிகளுக்கு மட்டுமல்லாது, சோவியத் யூனியனது பிரஜைகளான நம் அனை வருக்கும், இன்றைய, வருங்காலத் தலைமுறையினருக்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினை யாகும். உலகைப் போலவே நிலமும் பிரிக்கவொண்ணாதது என்பதை நாம் மிக நன்றாக அறிவோம்; மேலும், நமக்கு உணவளித்து வரும் நமது சாகுபடி நிலங்களை நாம் அன்போடும் கவனத்தோடும் மதித்து நடத்தி வரும் அதே சமயத்தில், நாம் வாழ்ந்து பணியாற்றி வரும், இன்ப துன்பங்களை அனுபவித்து வரும் நிலத்தையும், மனிதனின் நன்மைக்காக அதன் மீது இருந்து வரும் அனைத்தையும், அதே அன்போடும் கவனத்தோடும் மதித்து நடந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கட்டாயக் கடமையாகும். நான் காடுகளையும், நதிகளையும், அவற்றின் தொகைகளையும்தான் குறிப்பிடுகிறேன். இந்தப் பிரச்சினைகளின் பால் நாம் கொண்டுள்ள மனப்போக்கை நாம் திரும்பத் திரும்ப மறு பரிசீலனை செய்யவும், இயற்கைத்தாய் நமக்கு வழங்கியுள்ள வளங்களைப் பாதுகாத்து வர, எங்கெங்கே அலசியமோ அங்கெல்லாம் அதியவசரமான முடிவுகளை எடுக்க வும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும். லியோனத் இலியில் பிரெஷ்னேவின் உரையில் நாம் கேட்டறிந்த, இந்தக் கட்டுப்பாடோடு கூடிய கண்டிப்பான எச்சரிக்கை மிகவும் தக்க த ரு ண் த் தி ல் விடுக்கப்பட்டதாகும், மேலும் இந்த எச்சரிக்கைக்குச் செவி சாய்ப்பது, மிகவும் சிக்கன க்கார நபர்களான உங்களுக்கும்கூட நன்மையே பயக்கும். பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கள் பலவும், அவற்றின் உடனடித் தன்மையை உணர்ந்து பார்க்கத் தூண்டுகின்றன, இது இப்படித்தான் இருக்க வேண்டும்; ஏனெனில் பிரதிநிதிகள் நிலத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி வரும் திறமையாளர்கள்