பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படை வீரன். போருக்குப் போக முடியாத அளவுக்கு எனக்கு மிகவும் வயதாகி விட்டது; என்றாலும், ஊர் காவல் படையில் நானும் என்னைப் பதிவு - செய்து கொண்டிருக்கிறேன். சென்ற ஜெர்மன் போரில் என் வயிற்றில் காயம்பட்டுவிட்டது. அந்த ஜெர்மன் துப்பாக்கித் தோட்டா எனக்குப் பெரும் தொல்லை கொடுத்து, வந்துள்ளது, என்றாலும் இன்னும் என் னால் வேலை பார்க்க முடியும்.....அவசியம் நேர்ந்தால், போரிடுவதில் நான் என் புதல்வர்களோடு போய்ச் சேர்ந்தும் கொள்வேன். கிராஸ்னயா ஜ்வெஜ்தா வுக்கு (ராணுவப் பத்திரிகை) நான் ஒரு கட்டு கரை 6எழுதப் போகிறேன் என்று தெரிந்து கொண்ட தும், அவர் ஆர்வத்தோடு இவ்வாறு கூறினார்: , போர் முனையிலுள்ள எனது புதல்வர்களும் சரி, மற்றும் எல்லாப் போர்வீரர்களும் சரி, இங்கு பின்னணியிலுள்ள நாங்கள் அவர்களைக் ல கவிட்டுவிட மாட்டோம் என்பதை . உங்கள் பத்திரிகையின் மூலம் அவர்கள் தெரிந்து கொள்ளட்டும், அந்த நாஜிகளின் மீது எந்த இரக்கமும் காட்ட வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறுங்கள்; அந்த நாஜிகள் : நமது . நாட்டில் தமது கல்லறைகளைத் தவிர வேறு எதையும் காணப் போவதில்லை என்பதை அவர்களுக்குக் காட்டும். அளவுக்கு அத்தனை மூர்க்கமாக அவர்களோடு போரிடுமா று அவர்களுக்குக். கூறுங்கள்.” நாங்கள் சோஷலிச மார்க்கக் கூட்டுப் பண்ணையின் அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தபோது, அங்கு பேரேடுகளைப் பதிந்து வரும் ஒரு முதியவரைத் தவிர வேறு யாரையும் நாங்கள் காணவில்லை, பண்ணையின் தலைவர் வயலுக்குப் - போயிருப்பதாக அவர் கூறினார், கிராமத்திலேயே எவரும் தென் படவில்லை; மக்கள் அனைவருமே வயல்களுக்குச் சென்று அறுவடை செய்வதிலும், கதிரடிக்கும் களங்களைச் சுத்தம் செய்வதிலும் அல்லது தானியத்தை வண்டிகளில் ஏற்றுவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். - அந்தப் பேரேட்டுப் பதிவாளர் தமது பேனாவை ஒரு கணம் கீழே வைத்து விட்டு, எங்களிடம் இவ்வாறு கூறினார்: “என் மகன் மேற்குப் போர் முனையில் இருக்கிறான். அவன் ராணுவ., சேவையில் மூன்றாண்டுகளாகப் பணியாற்றி , வந்தான்; ஒரு பீரங்கிப் படைப் பிரிவின் தளபதியாக இருந்தான், அவனிடம் , என்ன ரகமான பீரங்கியுள்ளது என்று நான் எழுதிக் கேட்ட போது, ' நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். குடும்பத்தாருக்கு

- எனது; வணக்கங்களைக் கூறுங்கள், பீரங்கிகளைப் பற்றி என்னிடம்,

61