பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் அந்தக் கோஷ்டியினரிடம் சென்று, அவர்கள் ஏன் அந்த எருதுகளை அத்தனை தலை தெறிக்கும் வேகத்தில் விரட்டியடிக்க வேண்டும் என்று கேட்டேன்." அதற்கு அந்தக் கோஸாக்குகளில் ஒருவன் இவ்வாறு பதில் சொன்னான்: இந்த எருதுகளுக்கு இது பழகிப் போய் விட்டது. இதனால் அவற்றுக்கு எந்தக் கெடுதலும் நேர்வதில்லை, மேலும் நாங்கள் துரிதமாக வேலை பார்க்கும்போது எங்கள் வேலையும் மிகவும் எளிதாகவுள்ளது. அத்துடன் நாங்கள் அவசரம் அவசரமாகவும் வேலை பார்க்க வேண்டியுள்ளது, ஏனெனில், எந்த நாளிலும் எங்களையும் போர் முனைக்கு அனுப்பி வைக்கக் கூடும். அவ்வாறாயின், இத்தகைய பயிர் விளைச்சலைச் சமாளிப்பது பெண்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். என்றாலும் என்னை ஏன் அவர்கள் படையில் சேரத் தேர்ந்தெடுக்கவில்லை? அதற்கான காரணம் எனக்குத் தெரிந் தால் நல்லது. என் வயதையொத்த ஏனைய பயல்களையெல்லாம் அவர்கள் படையில் சேரத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் என்னை மட்டும் ஏதோ காரணத்தினால் விட்டு விட்டார்கள். நான் மட்டும் மற்றவர்களைப்போல் தகுதியுள்ளவனாக இல்லையா? அல்லது இதற்கு வேறு என்ன காரணம்? அந்த நபரின் பெயர் பொகுசயேவ்; அவன் உள் ளூர்க் கொல்லுலைத் தொழிலாளியின் மகன். பீப்பாய் மார்பு கொண்ட அந்தக் கட்டுமஸ்தான இளைஞன் தனது ராணுவ சேவையின் போது பீரங்கிப் படையில் இருந்திருக்கிறான். மற்றவர்களோடு நான் உரையாடியதன் மூலம் அவர்கள் எல்லோருமே ஏதாவ தொரு ராணுவ சேவைப் பிரிவில் ராணுவப் பயிற்சி பெற்றிருந்தனர் என்பதை அறிந்து கொண்டேன். போருக்குச் சென்று, ரத்தத்தினாலும் மலிவான வெற்றிகளாலும் போதை யேறிப் போயிருந்த ஜெர்மானியர்களை அடித்து நொறுக்குவதற்கு, அந்த வலிமையும் ஆரோக்கியமும் மிக்க இளைஞர்கள் பொறுமை, யற்றுத் துடியாய்த் துடித்ததையும் நான் புரிந்து கொள்ள முடிந்தது. அது எல்லா இளம் டான் கோஸாக்குகளிடமும் தென் பட்ட பொறுமையின்மையாகும்; அது நமது நாட்டை அதன் எண்ணற்ற எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, பல நூற்றாண்டுகளாக நமது நாட்டின் எல்லைகளில், தமது ரத்தத்தைப் பாய்ச்சிவந்த மூதாதையர்களைக் கொண்ட மனிதர்க ளிடம் தென்பட்ட பொறுமையின்மையேயாகும்.. அந்தக் கூட்டுப் பண்ணையின் கதிரடிக்கும் களத்தின் காவல் காரராக அப்போது பணியாற்றி வந்த, என்பத்தி மூன்று

வயதான மனிதரான இஸாய் மார்க்கோவிச் யெவ்லாந்தியேவின்.

63