பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்களைக் கடந்து கடகடத்துச் சென்றன. அந்த ராட்சச 2.உராக்டர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவதற்காக நாங்கள் ரோட்டுப் பாதையிலிருந்து நிர்பந்தமாக விலகிச் செல்ல நேர்ந்தது. இதன் பின்னர் நாங்கள் காயமடைந்த போர்வீரர்களைச் சுமந்து வந்த இரு ஆம்புலன். கார்களுக்கும், காயமடைந்த குதிரைகளைக் கொண்டு வந்த ஒரு டிரக் வண்டிக்கும் இடம் விட்டு விலகிக் கொண்டோம். நான் ரோட்டின் - ஓரத்தில்தான் நின்றேன்; எனவே ஆடியசைந்து வந்த அந்த டிரக் வண்டியின் பலகைப் பகுதி, 'என் தலைக்கு மேலாகக் கடந்து செல்வதுபோல் எனக்குத் தோன்றியது ; அப்போது நான் எனக்கு மிகவும் அருகில், பனித் துளிகள் படிந்து நனைந்த கழுத்தையும், கண்ணீர் வடியும் பெரிய, கரு நீலக் கண்ணையும் கொண்ட ஒரு காயமுற்ற குதிரையை அதில் கண்டேன். இரவு நடந்த போரில் முதன்முதலாகப் பாதிக்கப்பட்டவை அந்த குதிரைகள்தான். . . தளபதி கோஸ்லோவின் யூனிட்டைச் சேர்ந்த அதிகாரிகள் . இருக்குமிடம் ஒன்றும் அதிக தூரத்தில் இல்லை. நாங்கள் காரை மரச்செறிவு மிக்க ஒரு பள்ளத்தாக்கில் நிறுத்திவிட்டு, நூற் குண்டுக் காலமாக வளர்ந்தோங்கி நின்ற பைன் மரங்கள், அடர்த்தியாகச் செறிந்திருந்த செங்குத்தான சரிவில் இறங்கி நடக்கத் தொடங்கினோம். நாங்கள் அந்த அதிகாரிகள் இருக்கும் - பிரதேசத்தைக் கிட்டதட்ட நெருங்கிவிட்ட சமயத்தில், ஒரு மாயைத் தோற்றம் சற்றும் எதிர்பாராத விதத்தில் அரவமே இல்லாமல் உருவெடுத்துக் காட்சியளிப்பது போல், திடீரென்று எங்கிருந்தோ ஒரு ஸென்ட்ரிக் காவல் வீரரின் உருவம் எங்கள் முன்னால் பாதையில் எதிர்ப்பட்டது , என்றாலும் அந்த மாயைத் தோற்றம். கையில் ஒரு தானியங்கித் துப்பாக்கியைத் தரித் திருந்தது; , ஆளை மறைத்துக் காட்டும் ஒரு கோட்டையும் அணிந்திருந்தது. அந்தக் காவல் வீரர் ஒரு புதருக்குப் பின்னா லிருந்துதான் வெளியே வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது அவர் தமது துப்பாக்கியைத் தயார்நிலையில் பிடித்துக் கொண்டு, எங்களை அளந்து நோக்கினார்; பின்னர் எங்களது அனுமதிச் சீட்டுக்களைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்; அவற்றை வாங்கி அவற்றை மிகவும் துருவித் துருவி ஆராய்ந்துப் பார்த்தார். அவருக்குப் பின்னாலிருந்த புதர் லேசாக அசைந்து கொண்டிருப் டதை நான் கண்டேன்; அங்கு இலை களுக்கூடே எங்களது வழியைக் குறி வைத்து இரண்டு துப்பாக்கிச் சனியன்களின் முனைகள் தென்படுவதையும் நான் கண்டேன்.

"அங்கிருந்த நிலப்பரப்பு நீளப்போக்கில் அமைந்த பதுங்கு குழி .

களால் வெட்டுண்டிருந்தது. மரக்கிளைகளால் மூடப்பட்டிருந்த

76