பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தயாரிப்புக்கா ன குண்டு வீச்சு இன்னும் பதினைந்து நிமிடங்களில் தொடங்கவிருந்தது. முன்னணியிலிருந்து அப்போது தான் வந்திருந்த துணை லெப்டினென்ட் நவமோ வுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தனர். அவர் எதிரியின் பீரங்கிப் பிரயோகத்துக்கு மத்தியில் கிட்டத்தட்ட அரைக் கிலோ மீட்டர் தூரத்துக்குத் தரையில் ஊர்ந்து வரவேண்டியிருந்தது; எனவே அவரது சட்டைக்கைகள், மார்பு, முழங்கால்கள் ஆகியவற்றிலெல்லாம் நசுங்கிப் போன புல்லின் பிரகாசமான பச்சை நிறம் கறை படிந்திருந்தது. என்றாலும், அவர் ரோட்டுத் தூசியைத் தட்டி விட்டுவிட்டு, என் முன் நின்றார் கச்சிதமான ராணுவத் தோற்றத்தோடு அமைதியாகப் புன்னகை புரியும் இளம் அதிகாரியாக நின்றார். அவருக்கு 27 வயதாகியிருந்தது; இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அவர் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தார். போர் ஆரம்பித்த நாட்களிலிருந்தே அவர் போர்புரிந்து வந்திருந்தார். அவரது முகம் வட்டவடிவ மாக இருந்தது; கன்னங்களில் இளம் பொன்னிறமான சுருட்டை முடி நிறைந்திருந்தது) ; அவரது கபில நிறக்கண்களில் அன்பு ததும்பியது; அவரது புருவங்கள் சூரிய ஒளியில் நிறம் மங்கிப் போயிருந்தன. அவரது உதடுகளில் எப்போதும் ஓர் இனிமை யான, நாணப் புன்னகை குடிகொண்டிருந்தது. இந்த அடக்கம் மிக்க இளம் ஆசிரியர் தமது மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இருந்திருக்க வேண்டும் என்றும், ஒரு காலத்தில் அவர் தமது மாணவர்களுக்குக் கணக்குகள் சம்பந்தப் பட்ட விஷயங்களை எவ்வாறு விளக்கிக் கூறினாரோ, அதே அத்துபடியான தன்மையோடும், பொறுமையோடும் போர் வீரர் களுக்கு அவர்களது பணிகளை விளக்கிக் கூறுவதன் மூலம் போர் வீரர்கள் மத்தியிலும் அவர் மிகவும் பிரபலமானவராகவே இருக்கவேண்டும் என்றும் நான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவரது தலைக்கவசத்துக்கு அடியில் தலைகாட்டிய அவரது வெட்டப்பட்ட அழகிய தலைமுடியில் ஏராளமான நரை தென் படுவதையும் நான் வியப்போடு கவனித்தேன். உரிய பருவத்துக்குமுன் தோன்றிவிட்ட இந்த நரைக்குப் போர்தான் காரணமா என்று அவரிடம் கேட்டேன்; அவரோ ஒரு புன்னகை புரிந்தவாறே, தாம் ராணுவத்தில் சேரும் காலத்தில் தமக்கு ஏற்கெனவே நரை தோன்றி விட்டது என்றும், எனவே இனி எந்தவிதமான அதிர்ச்சிகளும், தமது தலைமுடியின் , நிறத்தைப் பாதித்துவிட முடியாது என்றும் பதில் கூறினார். நாங்கள் உரையாடி மகிழ்வதற்காக , ' நிலவறையின்' மண்

சுவரின் மீது வந்து அமர்ந்தோம். ஆயினும் உரையாடல் தளர்வு

83