பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டது. எங்களோடு உரையாடியவர் தம்மைப்பற்றி. பேசு வதையே விரும்பவில்லை. அவரது தோழர்களைப்பற்றி நான், அவரிடம் கேட்கும்போது மட்டும்தான் அவர் உற்சாகம் அடைந்தார். சமீபத்தில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டு விட்ட தமது நண்பரான லெப்டினென்ட் அனாஷ்கின்னை அவர் வியந்து பாராட்டிப் பேசினார். இடையிடையே அவர் நமது பீரங்கி களின் ஓசையையும், அதிகாரிகளது பிரதேசத்துக்குப் பின்னால் எங்கேயோ வெடித்துக் கொண்டிருந்த ஜெர்மன் குண்டுகளின் ஓசையையும் கேட்பதற்காக, தமது கதையை அடிக்கொருதரம் நிறுத்திக் கொண்டார், உரையாடலை நான் அவரைப் பற்றிய தாக மாற்ற முயன்றபோது, அவர் முகம் சுளித்தார்; பிறகு விருப்பமில்லாமலே இவ்வாறு கூறினார்:

    • உண்மையில், சொல்வதற்கு எதுவுமே இல்லை. நமது :

டாங்கி-எதிர்ப்புப் பீரங்கிப் படை சக்கைப்போடு போட்டு வருகிறது. நாம் ஏராளமான ஜெர்மன் டாங்கிகளை முடமாக்கி விட்டோம், எல்லோரும் செய்வதைத்தான் நானும் : செய்கிறேன். ஆனால் அனாஷ்கின்-அவர் செய்தது உண்மை யிலேயே அற்புதமானது! லுச்சி கிராமத்துக்கு அருகில் நாங்கள் நள்ளிரவில் தாக்குதலைத் தொடுத்தோம்; பொழுது விடிந்தபோது, எங்களுக்கு எதிராக ஐந்து ஜெர்மன் டாங்கிகள் இருந்தன என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். நான்கு டாங்கிகள் வயல்வெளியில் ஓடிக்கொண்டிருந்தன. ஐந்தாவது டாங்கி எரிபொருள் இல்லாமையால், அசையாமல் நின்றுகொண்டிருந்தது. நாங்கள் பீரங்கிப் பிரயோகத்தைத் தொடங்கி, அந்த ஐந்து டாங்கிகள் அனைத்தையும் பிடித்து விட்டோம். ஜெர்மானியர்கள் தமது சிறு பீரங்கிகளால் சுட்டுக் கொண்டிருந்தனர்; அவர்களது ஆயுதங்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இடங்களுக்கு எங்களால் செல்லவே முடியவில்லை. நமது காலாட்படை உற்சாகம் இழந்துவிட்டது. இதன் பின் அனாஷ்கினும் எங்களது வேவு பார்க்கும் படை வீரரான ஷிகலேவும் அந்த ஜெர்மன் டாங்கிகளில் ஒன்றின் பக்கமாக ஊர்ந்து சென்று, அதனுள் ஏறினர். அந்த டாங்கியில் இருந்த பீரங்கி நல்ல நிலையிலிருந்தது. அது ஓர் 78 எம். எம். பீரங்கி, மேலும் அங்கு குண்டுகளும் போதிய அளவுக்கு இருந்தன, எ6:5வே அவர் இந்த ஜெர்மன் பீரங்கியை ஜெர்மானியர் களுக்கு எதிராகவே திருப்பிச் சுட்டார்; அவர்களது சிறு பீரங்கிப்படையை நொறுக்கித் தள்ளினார்; பின்னர் அவர்களது கா லாட்படையின் பக்கம் திரும்பினார். அனாஷ்கினும் அவரோடு

இருந்தவர்களும் சுடுவதற்கான ஒரு புதிய நிலைக்குத் தமது

84