உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு முத்தமிழ் மணமுண்டு.. மூவேந்தர் முக்கொடி முக்கனியென மும்முரசார்த்தவர் தமிழர் - அவர் வாழ்ந்த தமிழ் “வாழ்வு”க்கு மூன்றெழுத்து - அந்த வாழ்வுக்கு அடிப்படையாம் 'அன்பு'க்கு மூன்றெழுத்து.. அன்புக்குத் துணை நிற்கும் ‘அறிவு’க்கு மூன்றெழுத்து அறிவார்ந்தோர் இடையிலெழும், “காதலு”க்கு மூன்றெழுத்து... காதலர்கள் போற்றி நின்ற கடும் ‘வீரமோ' மூன்றெழுத்து.. வீரம் விளைக்கின்ற 'களம்' மூன்றெழுத்து... களம் சென்று காணுகின்ற 'வெற்றி' மூன்றெழுத்து அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும் அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்து அறிந்திடுவீர் எனச் சொன்னேன்! திக்கெட்டும் தமிழ் முழக்கம் திசையெங்கும் சொன்மாரி வக்கற்றோர் வகையற்றோர் வாழ்வதற்குத் திட்டம் கோரி வண்டாகச் சுற்றுகின்றார் மேடையேறி! எழுதுகின்றார் அண்ணா எனில், ஏடெல்லாம் வீடெல்லாம் தமிழ் நாடெல்லாம்... புதுமை மணக்குதங்கே... “ஏடா தம்பி! எட்டா பேனா...!" “கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு" கருத்துப் பேழை கற்பூரப் பெட்டகம்! "மரக்கிளையிலே பிணம்; வெந்த புண்ணிலே வேல்!” 14