உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயத்தைத் தந்திடு அண்ணா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மறந்திடப் போமோ; மனங்கவர் வாசகம்? "சாலை யோரத்திலே வேலையற்றதுகள் வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள் வேந்தே! அதுதான் காலக்குறி!” அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை? அறிவு நடை? "கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது" தமிழகம் மறவாத் தலையங்கமன்றோ! "இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?” "தம்பியுடையான் படைக்கஞ்சான்!” ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல் மனோன்மணீயம் எனினும் - நம் மனத்தில் பதித்தவர் அண்ணாவன்றோ! “மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” அரசியல் பண்பினைப் போதிக்கும் அழகே! "மறப்போம் - மன்னிப்போம்" மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே! . எவர் கற்றுத் தந்தார் இதனை? சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல் போல் நயமிகு பண்புடன் அரசியல் நடாத்தல் நன்றென்றார் அண்ணா அதை மறுத்து நாலைந்து பேர் குதித்திட்டார் என்றால் அவர் கண்டு சிரித்திட்டார் அண்ணா! அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்க வயிறு தாங்காக் காரணத்தால் 15