24
இதய
வெகுஜனப் பிரயோசனமான காரியங்களில் பிரவர்த்தியாத காலத்து அயலாரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே உன் வாழ்நாளை வீணாக்காதே. ஏனெனில் பிறர் என்ன நினைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று நீ நினைத்துப் பார்க்கும் நேரத்திலெல்லாம் உன்னாற் செய்யக் கூடியவற்றைச் செய்யாதொழிகிறாய்.
9
மனத்திலே வியர்த்தமான எண்ணங்களும் எழாமல் நாம் காத்துக்கொள்ள வேண்டும். யாராவது திடீரென்று, “நீ இப்பொழுது என்ன எண்ணிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டால், உடனே இன்னது என்று பயமின்றிப் பகிரங்கமாய்ச் சொல்லக்கூடிய விஷயங்களைப் பற்றி மட்டுமே எப்பொழுதும் மனத்தில் எண்ணும்படி நாம் பழகவேண்டும்.
10
மனிதன் எல்லாருடைய அபிப்பிராயங்களையும் பின்பற்ற வேண்டியதில்லை. இயற்கையோடு இனங்கி நல்வழி நிற்பவரின் அபிப்பிராயத்தையே பின்பற்ற வேண்டும்.
11
எப்பொழுதும் சந்தோஷமாக இரு. பிறரால் வரும் சாந்தியையாவது, பிறருடைய உதவியையாவது தேடாதே. மனிதன் தன் பலத்தைக் கொண்டே தானகவே நிமிர்ந்து நிற்க வேண்டும்.
12