பக்கம்:இதய உணர்ச்சி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணர்ச்சி

31


மற்றொருவன் அவ்வளவு தூரம் போவதில்லை; ஆனால், உதவி பெற்றவனைத் தன் கடனாளியாகக் கருதுகிறான். தான் செய்துள்ள உபகாரத்தை அவன் மறக்கிறதே யில்லை.

மூன்றாவதொருவன் ஒரு விதத்தில் தான்செய்தது இன்னது என்றுகூட அறியான். பழத்தைக் கொடுத்துவிட்டு அதற்காக யாதொரு கைம்மாறும் வேண்டாத திராட்சைக் கொடி போன்றவன் அவன். பந்தயம் ஓடி வென்ற குதிரை, “இதோ என் சாமர்த்தியத்தைப் பார்!” என்று சொல்வதில்லை. வேட்டையைப் பிடித்து விட்ட நாய், “என் செளரியத்தைப் பார்!” என்று கூறுவதில்லை. தேன் கூட்டி வைத்து விட்ட வண்டு, “என் சக்தியைப் பார்!” என்று பெருமை பேசிக் கொள்வதில்லை. அவைகளைப் போலவே, சால்புடைய ஒருவன் ஒரு நற்காரியம் செய்தவுடன் எல்லோரையும் அழைத்து, “நான் செய்த காரியத்தைப் பாருங்கள்“ என்ற மார்பு தட்டிப் பேசமாட்டான். மற்ற, ஒரு தடவை பழம் தந்துவிட்ட திராட்சைக் கொடியானது வாய் பேசாமல் மறுபடியும் காலக்கிரமத்தில் பழங்களை உயிர்க்கும் காரியத்தில் இறங்குவது போல, அவனும் இன்னொரு புண்ணிய காரியத்தில் பிரவேசித்து விடுகிறான்.

32

★ ★ ★

காரியங்களை அறநெறிப்படி செய்வதில் ஏதாவது ஒரு விஷயத்தில் தவறிப் போனால் அதற்காக வெறுப்பாவது, அதைரியமாவது, அதிருப்தியாவது அடைய வேண்டாம். அறநெறியினின்றும் ஒருகால் வழுவி விட்டாயானால் திரும்பவும் அவ் அறநெறிக்கு வந்து சேர்ந்துவிடு. நீ செய்யும் காரியங்களிற் பெரும்பாகம் மனித இயற்கைக்குப் பொருந்தியதா யிருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/33&oldid=1105864" இலிருந்து மீள்விக்கப்பட்டது