உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய உணர்ச்சி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

இதய


வேண்டியதற்கு அதிகமாக உண்கிறாய், குடிக்கிறாய். ஆனால், வேலை செய்வதிலோ நீ இவ்வாறு அளவுக்கு மீறுவதைக் காணோம். அம்மட்டோ! உனக்குச் சாத்தியமான அளவுகூட நீ வேலை செய்வதில்லை.

29

★ ★ ★

ரு வேலையைச் செய்வதோ அல்லது ஒரு வார்த்தையைச் சொல்வதோ நல்லதாகுமானால், அப்படிச் செய்வதையும் சொல்வதையும் கெளரவத் தாழ்வாகக் கருதாதே.

30

★ ★ ★

னிதர் வியக்கக்கூடிய கூரிய அறிவு உனக்கில்லை என்ற உனக்குத் தோன்றுகிறது. அந்த அறிவு இல்லையானால் பாதகமென்ன? 'உண்மை, திருப்தி, பொறுமை போன்ற வேறு எத்தனையோ குணங்களைப்பற்றி, “இவை என் சுபாவத்தில் இல்லை, அக்குணங்கள் எனக்குக் கிட்டா” என்று நீ சொல்லிக்கொள்ள முடியாது. அவைகளை அடைதல் உனக்குச் சாத்தியமான காரியமேயாகும்.

31

★ ★ ★

யலான் ஒருவனுக்கு ஓர் உதவி செய்து விட்டால் ஒருவகை மனிதன் அதைத் தான்செய்த ஒரு பெரும் புண்ணியம் எனக்கொண்டு, தான் ஒரு வள்ளல் போல நடந்து கொண்டு விட்டதாக நினைத்துக் கொள்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_உணர்ச்சி.pdf/32&oldid=1105836" இலிருந்து மீள்விக்கப்பட்டது