உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11 சென்னையில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு முன்பு மறியல் செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்படும் போதே நான் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் பதினைந்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது-என்னை விடுதலை செய்யுமாறு கோரி பதினாறு பேர் தீக்குளித்து அவர்களில் ஏழு பேர் மாண்டு போயினர். நான் சிறையிலிருப்பதைத் தாங்கிக் கொள்ளாமல் அந்தச் செயலில் ஈடுபட்ட உடன்பிறப்புக் களின் உணர்வுக்கு உருகிய போதிலும் - உடனடியாக சிறையிலிருந்தவாறே நானும்-நமது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் தீக்குளிப்பதும் தற் கொலை செய்து கொள்வதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறைகள் அல்ல; தயவு செய்து நிறுத்துங்கள் என்று அறிக்கைகள் விடுத்தோம்! ஆனாலும் நடந்தது நடந்து விட்டதே - என்ன செய்ய! சென்ற ஆண்டு கூட ஆரணிக்கருகே நமது கழக உடன் பிறப்பு ஒருவர் ; இலங்கைத் தமிழருக்கு விளைந்த கொடுமை கண்டு கொதித்து தனக்குத் தானே கொள்ளி வைத்துக் கொண்டார்! ஆந்திரத்தில் இந்திராகாந்தி நடத்திய ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து தமிழகத்தில் நாம் நடத்திய பேரணியின் போது- குன்றத்தூரில் கழக உடன் பிறப்பு ஒருவர் தீக்குளித்த செய்தி நமது நெஞ்சில் செந்தேளாகக் கொட்டிற்று! மொழிப் போரில் தீக்குளித்து மாண்ட தீரர்களை- அன்றைக்கு இந்தி ஆதிக்கத்துக்கு வக்காலத்து வாங்கிய வர்கள், இந்தி எதிர்ப்பாளர்களைச்சுட்டு வீழ்த்திய கட்சிக் காரர்கள்-வறுமையால் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் - கடன் தொல்லை-குடும்பச் சச்சரவு-- அதனால் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்றும் நெஞ்சில் ஈரமும் இரக்கமுமின்றி இழித்தும் பழித்தும் •பேசினர்! மக்கள் மன்றத்திலே மட்டுமல்ல; சட்டமன்றத்திலே கூட அன்றைய ஆளுங்கட்சி தரப்பிலே அந்தத் தியாகச் சீலர்களின் மீது சேறு வாரி இறைக்கப்பட்டது! அந்தத்