________________
அ.தி.மு.க. உடன்பிறப்புகளுக்கு! உடன்பிறப்பே! எனது இனிய நண்பர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் உடல்நிலை கேட்டு அதிர்ச்சியுற்று- பதறிப் போய் -- தாங்க முடியாத வேதனையின் காரணமாக உணர்ச்சி வசப்பட்டு அ.தி.மு.க. தொண்டர்கள் பத்து பேருக்கு மேற்பட்டோர் தங்களின் மேனிக்கு தீயிட்டுக் கொண்டும் நஞ்சு அருந்தியும் உயிரைப் போக்கிக் கொண்டார்கள் என்ற செய்தி கேட்டுப் பதைத்துப் போகிறேன். மேலும் பலர் அந்த முயற்சியில் ஈடுபடு கிறார்கள் என்ற செய்திகளும் இதயத்தில் வேல்க களைப் பாய்ச்சுகின்றன. தங்களின் தலைவனுக்கு வந்துற்ற நோய் எத்துணை இன்னலை அவருக்குத் தருகிறது என்பதை எண்ணிடும் போது உள்ளம் எரிமலையாகிற காரணத்தால் துடித்துப் போகிற அந்த உடன் பிறப்புக்கள்; உயிரோடிருந்து அந்த வேதனையை சகித்துக் கொள்ள முடியாமல் உயிரைப் போக்கிக் கொள்வதின் மூலம் தங்களுக்குத் தாங்களே அமைதியைத் தேடிக் கொள்கிறார்கள் என்பதை உணர முடிகிறது! 1964-1965 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப் புரட் சியை யொட்டி கீழ்ப்பழுவூர் சின்னச்சாமி தொடங்கி மொத்தம் எட்டுத் தமிழர்கள்; தீக்குளித்தும், நஞ்சருந்தி யும் தங்கள் உயிரைப் போக்கிக் கொண்ட போது அவர் களின் உணர்வு மதிக்கத்தக்கது என்றாலும் அவர்கள் மேற்கொள்கிற போராட்ட முறை ஏற்கத்தக்கது அல்ல என்று நமது அண்ணா அவர்கள் கருத்து தெரிவித்து, அந்த செயல்கள் இனித் தொடரா வண்ணம் ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று விரும்பினார்கள். அதற்கடுத்து 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் இலங்கைத் தமிழர்களின் படுகொலையைக் கண்டித்து