உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய ஒலி, மு. கருணாநிதி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசியலில் நீங்கள் எடுத்த அதனால் ஏற்பட்ட திருப்பங்கள்! அதன் காரணமாக உங்கள் வழி அந்தத் திடீர் நிலை! வேறாகிவிட்டது! என் வழியோ எப்போது மிருந்த வழியாக இருக்கிறது! வாதம் நான் நடக்கும் வழிதான் நல்வழியென்று செய்து மோதிக்கொள்வதிலே கூட ஒரு சுவையுண்ட ல் லவா நம் இருவருக்கும்; அதற்காகவும் நீங்கள் நலமுடன் திகழ வேண்டுமென்று தானே இந்த நண்பனின் இதயம் ஏங்கிக்கொண்டிருக்கும்! நான் ஆலயங்களுக்குச் சென்றிருக்கிறேன்; ஆட்சிப் பொறுப்பின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக! கலைச் சிற்பங்களைக் கண்டு மகிழ்வதற்காக! பிரார்த்தனை கள் செய்ததுமில்லை; அதற்காகப் பிரகாரங்கள் சுற்றியதுமில்லை! இப்போதும் உங்களுக் காக அந்தத் தெய்வீகப் பிரார்த்தனையில் நான் ஈடுபட வில்லை! என்னைப் பெரியாரும் அண்ணாவும் அப்படி வளர்த்து விட்டார்கள்! ஆனால் என் இனிய நண்பரே! உங்களுக்காக நடை பெறுகிற பிரார்த்தனைகள் வெற்றி பெறட்டும்! பாசமிகுந்த எனது பழைய காலத்துத் தோழரே! நீங்கள் அந்தப் பழைய புன்னகை முகத்தோடு எங் களைக்காண வாருங்கள்! உங்களைக் காண எங்களுக்கு இப்போது அனுமதி யில்லை! பரவாயில்லை; நீங்கள் நலமெல்லாம் எங்களைக் காண வந்தால் போதும்! 6 "பிரார்த்தனை" என்பதற்கு "துதி" என்பது பெற்று மட்டு மல்ல; "வேண்டுகோள்" என்றும் ஒரு பொருள் உண்டு! அந்தப் பொருளில் வேண்டுமானால் நானும் பிரார்த் தனை செய்கிறேன்; கருத்து மோதல்களுக்கிடையிலேயும் கனிந்துரையாடிடக் கடுகி எழுந்து வருக! கதிரொளி பட்ட பனிமூட்டமென விலகிடுக! உங்கள் நோய் மூட்டம் என்றும் உங்கள் நண்பன் மு.க. 9